'நக்கீரன்' வார இருமுறை பத்திரிகையில் 2019- ஆண்டுக்கான 'தீபாவளி போனஸ்' கொடுக்கப்படவில்லையாம். இதனால் மனமுடைந்த ஊழியர்கள் 'நக்கீரன்' நிர்வாகத்துக்கு எதிராக விரைவில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள அலுவலக வாயிலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவெடுத்துள்ளனராம். இதுதொடர்பான அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
30ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் 'நக்கீரன்' வார இருமுறை இதழில் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் கொடுக்கப்படாதது இதுவே முதல் முறையாம்.
ஏற்கெனவே கடந்த ஓராண்டுக்கு மேலாக 10-ஆம் தேதி வழங்கப்பட்டுவந்த மாத சம்பளம் 25 - ஆம் தேதிக்குப் பிறகே கொடுக்கப்படுகிறதாம். செப்டம்பர் மாத சம்பளத்தை தீபாவளிக்கு முதல் நாளான 26.10.2019 சனிக்கிழமையன்றுதான் கொடுத்தார்களாம். மாத சம்பளம் தாமதாகக் கொடுப்பதை முக்கியப் பொறுப்பிலிருக்கும் ஒருவரே ஓராண்டுக்குமுன் முகநூலில் வெளியிட்டாராம். அவர் நிர்வாகத்தினரால் எச்சரித்து விடப்பட்டாராம்.. மேலும் தீபாவளி போனஸ் கேட்ட ஊழியர்கள் சிலர் நிர்வாகியால் மிரட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதவிர சந்தன கடத்தல் வீரப்பனை வெளியுலகத்துக்கு அடையாளம் காட்டிய சேலம் ஆத்தூர் நிருபரான சிவசுப்பிரமணியம் பணியிலிருந்து விடுபட்டு ஓராண்டுகளுக்கு மேலாகியும் அவருக்கு வழங்கப்படவேண்டிய செட்டில்மெண்ட் (settlement) பணம் இன்னும் முறையாகவும் முழுமையாகவும் வழங்கப்படவில்லையாம்.
வீரப்பன் மூலம் 'நக்கீரன்' பத்திரிகைக்கு உலக அங்கீகாரம் கிடைக்க மூலகாரணமாக இருந்த சிவசுப்பிரமணியத்துக்கே இந்த நிலையா? என்று அங்கு பணிபுரியும் மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனராம்.
ஏற்கனவே 2017-ஆம் ஆண்டிலிருந்து பணியிலிருந்து விடுபட்ட ஊழியர்கள் பலருக்கும் செட்டில்மெண்ட் பணம் கொடுக்கப்படவில்லையாம். அதில் ஒருசிலருக்கு பணிகொடை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 10 ஆண்டிலிருந்து 20ஆண்டுகளை கடந்து பணிபுரிந்தவர்களும் இதில் அடக்கம். செட்டில்மெண்ட கேட்ட ஊழியர்களில் ஒருசிலர் மிரட்டப்பட்டிருக்கிறார்களாம். பலரும் இன்றுவரை அலைகழிக்கப்பட்டு வருகிறார்களாம்.
நக்கீரன் ஊழியர்கள் நடத்தவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பணியிலிருந்து விடுபட்ட ஊழியர்களும் கலந்துகொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
26ஆண்டுகள் 'நக்கீரன்' புலனாய்வு இதழில் இணை ஆசிரியராகப் பணிபுரிந்த அ.காமராஜ் என்பவருக்கு வெறும் 9லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்தார்களாம். அவரும் இந்த விஷயத்தை பெரிதுபடுத்தாமல் அங்கிருந்து விடைபெற்றாராம். காமராஜிடம் ஓட்டுனராகப் இருந்த நக்கீரன் ஊழியர் சுமார் 23ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த சக்திவேல் என்பவருக்கு 2லட்ச ரூபாய்கூட முழுமையாக கொடுக்கப்படவில்லையாம்.
நக்கீரனில் பணிபுரியும் ஊழியர்களிடையே ஒற்றுமை ஏற்படாதவாறு பார்த்துகொள்ளவும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவிடாமல் தடுக்கவும் நிர்வாகத்தின் கைகூலிகளாக செயல்பட்டுவரும் 10பேர் கொண்ட குழு முழுவீச்சாக செயல்பட்டுவருகிறதாம். மேலும் நிர்வாகத்தின் கைகூலியாக செயல்பட்டுவரும் தலைமை நிருபர் ஒருவர் பத்திரிகையாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதால், ஒருவேளை நக்கீரன் ஊழியர்கள் தீபாவளி போனஸ் வேண்டி தங்கள் உரிமைக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினால் சங்கம் தலையிடாது என்று கூறிவிட்டாராம்.
மேலும் அதிமுக அமைச்சர் ஒருவரை சந்தித்து நக்கீரன் ஊழியர்கள் பிரச்சினை வெளியே வந்தால் கண்டுகொள்ள வேண்டாம் என்று கூறினாராம் அந்த தலைமை நிருபர். அமைச்சரோ இதிலெல்லாம் என்னால் தலையிட முடியாது. அதிலும் ஊழியர்களுக்கு எதிராக ஒருபோதும் செயல்படமாட்டேன். எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு நியாயத்து பக்கமே நிற்கும் என்று கூறிவிட்டாராம்...
அமைச்சர் கூறிய தகவல் இடைத்தரகராக செயல்பட்டுவரும் தலைமை நிருபர் மூலம் நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டதாம்.
அதற்கு' 'நக்கீரன்' நிறுவனர் ஆர்.ஆர்.கோபால் என்ற நக்கீரன்கோபால், "நிறுவனத்துக்கு எதிராக ஊழியர்கள் போராடினால், நக்கீரன் நிறுவனத்தை ஒட்டு மொத்தமாக இழுத்துமூடிவிட்டு, குடும்பத்தோடு ஆஸ்திரேலியாவில் இருக்கும் எனது மூத்த மகள் பிரபாவதியோடு சென்று அங்கேயே செட்டில் ஆகிவிடுவேன்" என்று ஊழியர்களுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளராம்.
இதற்கிடையில் இந்த விஷயத்தை போலீஸ் நிருபர் ஒருவர், மத்திய - மாநில உளவுத்துறை போலீசாருக்கு கசிய விட்டாராம்.
நக்கீரன் நிர்வாகத்துக்கும் ஊழியர்களுக்குமிடையேயான பிரச்சினையில் உண்மை இருப்பதை மோப்பம் பிடித்த உளவுத்துறையோ அதற்கான தகவலை உரிய இடத்துக்கு அனுப்பிவிட்டதாம்.
இத்தகவல் நிர்வாகத்துக்கு கசிய, "நக்கீரன் என்பது ஒரு குடும்பம். இங்கு முதலாளி - தொழிலாளி என்ற பேச்சிக்கே இடமில்லை. எங்கள் குடும்ப பிரச்சினையை நாங்களே பேசித் தீர்த்துகொள்வோம்" என்று மழுப்பலான தகவலை நிர்வாகத்தரப்பு கூறி வருகிறதாம்.
'நக்கீரன் குடும்பம்' என்பதெல்லாம் வெளியுலகத்தை ஏமாற்றுகிற செயல். 10பேரை கொண்ட கைகூலிகளே நக்கீரன் குடும்பத்தின் நிரந்தர உறுப்பினர்கள் ஆவர். 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உரிமைகளை இழந்த வேலைக்காரர்களாகத்தான் இருக்கிறோம்" என்கின்றனராம் பாதிக்கப்பட்ட நக்கீரன் ஊழியர்கள். அதிலும் 2018 - 2019 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வு (increment) வழங்கப்படவில்லையாம்.
இதுதொடர்பான பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று சொல்லிவிட்டதாம் நிர்வாகத்தரப்பு...
இரண்டு ஆண்டுகளாக ஊதிய உயர்வை இழந்தோம். தற்போது தீபாவளி போனஸை இழந்துள்ளோம். இனி எதையெல்லாம் இழக்கப்போகிறோமோ தெரியவில்லை என ரத்த கண்ணீர் வடிக்கின்றனராம் 'நக்கீரன்' ஊழியர்கள்.

"உண்மையை எத்தனை நாட்களுக்குத்தான் மூடி மறைக்கமுடியும். நிச்சயம் ஒருநாள் அது வெளியே வந்தே தீரும்" .
No comments:
Post a Comment