🌟 ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோவில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாக செய்துள்ளனர்.
🌟 தீபங்களை நாம் ஏற்றுவதால் தெய்வங்கள் நம் கர்ம வினைகளை நீக்கி நல்ல பலன்களை தருகின்றன.
🌟 எட்டு திசைகளில் தீபங்களை ஏற்றுவதனால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
கிழக்கு திசை :
🌟 இத்திசையை நோக்கி தீபம் ஏற்றினால் வாழ்வின் துன்பங்கள் நீங்கும். கிரக தோஷம் நீங்கி லட்சுமி கடாட்சம் கிடைக்கும். வீடு இல்லாதவர்கள் வீடு வாங்குவார்கள்.
மேற்கு திசை :
🌟 இத்திசையில் தீபம் ஏற்றினால் பணத்தால் வந்த பகைமை வளராமல் தீரும். கடன் தொல்லை நீங்கும்.
வடக்கு திசை :
🌟 இத்திசையில் தீபம் ஏற்றினால் நல்ல காரியங்களில் வெற்றி பெறலாம். மாங்கல்யத்தைப் பேணி மதிக்காத பாவம் நீங்கும். திருமணம் கைகூடும்.
தெற்கு திசை :
🌟 வீட்டில் இத்திசையை நோக்கி தீபம் ஏற்றக்கூடாது. மரண பயம் உண்டாகும். வீட்டில் யாராவது இறந்து விட்டால் வசதி இல்லாதவர்கள் கோவிலில் தெற்கு நோக்கி தீபம் ஏற்றி இறந்தவர்களுக்கு நல்ல அனுகிரகத்தைப் பெற்றுத் தரலாம்.
தென்கிழக்கு திசை :
🌟 இத்திசையை நோக்கி தீபம் ஏற்றினால் குழந்தைகளுக்கு புத்திக்கூர்மை உண்டாகும். குழந்தைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக விளங்குவார்கள். இதற்கு தென்கிழக்கு திசையில் தீபம் ஏற்றி அதன் புகையை குழந்தைக்கு நெற்றியில் இடவேண்டும்.
தென்மேற்கு திசை :
🌟 இத்திசையில் தீபம் ஏற்ற பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வரும் துன்பம், கலகம் ஆகியன நீங்கும். திருமணத் தடங்கல்கள் நீங்கும்.
வடகிழக்கு திசை :
🌟 இத்திசையை நோக்கி தீபம் ஏற்றினால் வீட்டின் தலைவர் வாழ்வில் உண்மையான கொடையாளியாக மாறுவார். அவரும் அவர்தம் பிள்ளைகளும் தம்மையும் அறியாமல் தானம் செய்வார்கள்.
வடமேற்கு திசை :
🌟 இத்திசையை நோக்கி தீபம் ஏற்றினால் சகோதர, சகோதரி ஒற்றுமை நிலவும். குடும்பச் சண்டைகள் நீங்கும்.
No comments:
Post a Comment