96 குழந்தைகள் தீயில் எரிந்து செத்தார்கள். அடுத்து நடக்காமல் தடுக்க வேண்டுமா? இல்லை தீயால் எரியாத உடை அணிய சொல்ல வேண்டுமா?
16 பேர் ஆட்டோவில் சென்று ரயில் மோதி இறந்தார்கள். 5 பேருக்கு மேல் ஏற்றுவதை தடுக்க வேண்டுமா? ரயில் மோதினாலும் உடையாத ஆட்டோவை கண்டுபிடிக்க வேண்டுமா?
பேனர் விழுந்து வாகனத்தில் சென்றவர் பலியானார். பேனர் வைப்பதை தடுக்க வேண்டுமா? நிலை தடுமாறாத வாகனத்தை கண்டுபிடிக்க வேண்டுமா?
நீச்சல் தெரியாமல் தண்ணீர் குட்டைகளில் விழுந்து சிறுவர்கள் உயிரிழக்கிறார்கள். நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டுமா? குடும்பத்திற்கு 3 மிதவை சட்டை தரவேண்டுமா?
தேவைகள்தான் கண்டுபிடிப்புகளுக்கு தூண்டுதலாக இருக்க வேண்டுமே தவிர, பரிசு கொடுப்பதாக ஆசை காட்ட இது என்ன கவிதைப் போட்டியா?
50 பேர் 50 விதமான கருவிகளுடன் வந்தால் எதை வைத்து முடிவு செய்வீர்கள் சிறந்தது இன்னதென்று. 50 குழந்தைகளை குழியில் போட்டு சோதனை செய்வீரோ?
ஒருவேளை பொம்மையை சோதனை செய்து பரிசு பெற்ற கருவி, உண்மையான குழந்தை விஷயத்தில் தோற்றுவிட்டால், கண்டுபிடிப்பாளனை கழுவில் ஏற்றுவீரோ?
முட்டாள்களால் ஊருவான ஆட்சி. முட்டாள்களுக்காக ஆட்சி. என்ற ரீதியில் போய்க்கொண்டு இருக்கும் நிலையை மாற்ற ஒரு கருவி கண்டுபிடிக்க மாட்டீரோ?
நீ பஞ்சம் என்று கதறினாலும் பல கோடியில் திட்டங்களை தீட்டுவார்கள். வெள்ளத்தில் மூழ்கினுலும் பல கோடியில் திட்டங்கள் தீட்டுவார்கள்.
இரண்டுமே இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பல கோடியில் திட்டங்கள் தீட்டுவார்கள். எத்தனை கோடியில் திட்டங்கள் தீட்டினாலும் பிச்சை காசு மட்டும்தான் உன்னை வந்து சேரும்.
அடுத்து என்ன? அதிநவீன கருவிகள் வாங்க அமெரிக்காவிடம் அறுநூறு கோடியில் ஐந்து ஆண்டு பராமரிப்பும் சேர்த்து என 60 கருவிகள் வாங்கப்படும்.
200 ரூபாய் மூடியில் முடிய வேண்டியது.
600 கோடியில் முடியும்.
600 கோடியில் முடியும்.
கடைசி வரை நாமும் மூட வேண்டிய இடத்தை மூடமாட்டோம்.
வாயை திறக்க வேண்டிட இடத்தில் திறக்க மாட்டோம்.
வாயை திறக்க வேண்டிட இடத்தில் திறக்க மாட்டோம்.
ஊருக்கு உபதேசம் மட்டும் செய்வோம்.
என்னைப் போலவே.
என்னைப் போலவே.
No comments:
Post a Comment