Friday, November 1, 2019

தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

முரசொலி கிரய பத்திரம் எங்கே? நேர்மையை நிரூபிக்குமா சமூகநீதி சாம்பியன் திமுக? பேராசிரியரின் சரமாரி கேள்வி! பதிலளிப்பாரா ஸ்டாலின்?
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என, பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் ஸ்ரீநிவாசன் தேசிய பட்டியல் சமூக ஆணையத்திடம் நேரில் சென்று புகார் மனு கொடுத்தார். இது தொடர்பாக அந்த ஆணையம் ஒரு வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாஜக மாநில செயலாளர் போசிரியர் ஸ்ரீநிவாசன் ஆகிய இருவரையும் வசைபாடியுள்ளாரே தவிற முரசொலி அலுவலகம் தொடர்பான ஆவணங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை. மேலும் திமுக அதிகாரபூர்வ ட்வீட்டர் பக்கத்தில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பேராசிரியர் ஸ்ரீநிவாசன் ஆகியோரை வசைபாடி வெளியிடபட்ட ஸ்டாலினின் அறிக்கைக்கு சமூக ஊடகத்தில் கடும் எதிர்ப்பும், சரமாரியான பதிலடியும் கிளம்பியதால், வேறு வழியின்றி டிவிட்டர் பக்கத்தில் இருந்து ஸ்டாலினின் அறிக்கையை நீக்கியுள்ளது திமுக டிவிட்டர் பக்கம்.
திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கைக்கு பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் பேராசிரியர் ஸ்ரீநிவாசன். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது:
திமுக தலைவர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களின் மறுப்புரையில், அவரது கோபம் தெரிகிற அளவுக்கு அவரது நியாயம் தெரியவில்லை. “பஞ்சமி நிலத்தில் முரசொலி” என்பதே பல தரப்பில் வந்த குற்றச்சாட்டு. இதை முதலில் சொன்னவர் வைகோ. அவர் பற்றி ஐயா ஸ்டாலின் எதுவும் சொல்லவில்லை என்பது கூட்டணி பாசம் என்பது புரிகிறது. பாமக தலைவர் ஐயா ராமதாஸ் அவர்களுக்கும் சவால் விட்டிருக்கிறார். என்னையும் நிறையவே வசைபாடியிருக்கிறார். இதில் அவர் காட்டிய ஆர்வத்தை, முரசொலி நில விவகாரத்தில் காட்ட வேண்டும. சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்பது ஆங்கிலப் பழமொழி.
சமூக நீதியின் சாம்பியனாகத் தன்னை அடையாளப்படுத்தும் திமுக, பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்தது என்பதில் திமுக தன் நேர்மையை நிரூபிக்க வேண்டும். வெறும் பட்டாவைத் தவிர்த்து, தன் வசமுள்ள கிரய ஆவணங்களை வெளியிட வேண்டும். என்னை வசை பாட ஐயா மு.க.ஸ்டாலினுக்கு என்னை விடப் பெரியவர் என்பதால் உரிமை உண்டு. ஆனால் மக்களை ஏமாற்றும் உரிமை திமுக வு க்கு இல்லை.சிறுதாவூர் பஞ்சமி நிலம் என்றால் உங்கள் ஆட்சியில் ஏன் மீட்கவில்லை? என்னை விடுங்கள் ஐயா ஸ்டாலின், முரசொலிக்கு இந்த மண்ணை எப்படி வாங்கினீர்கள் என்பதை மக்களுக்குச் சொல்லுங்கள்” என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளர்.
போராசிரியர் கேள்விக்கு திமுக தலைவர் முறையாக விளக்கம் கொடுப்பாரா; அல்லது வழக்கம் போல் தனிமனிதனை தாக்கி வசைபாடுவாரா என தமிழக மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறனர். முரசொலி நிலம் பஞ்சமி நிலம் என திமுக உடன் கூட்டணி அமைத்துள்ள விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கடந்த காலங்களில் பேசியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...