ரூ.5.5 கோடி தங்கம் பறிமுதல்!
தங்கக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக சுங்கத் துறை அதிகாரிகள் 2 பேரை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடத்தல் குருவிகளிடம் இருந்து ரூ.5.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- சில நாட்களுக்கு முன்பு மலேசியா, இலங்கை, துபாயில் இருந்து வந்த பயணிகள், சென்னை விமான நிலையத்தில் சுங்கச் சோதனைகளை முடித்துவிட்டு வெளியே வந்தனர்.
- அப்போது, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு (டிஆர்ஐ) அதிகாரிகள் அந்த பயணிகளிடம் மீண்டும் சோதனை நடத்தினர்.
- அதில் 13 பயணிகளிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எலெக்ட்ரானிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
- அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அவர்கள் அனைவரும் கடத்தல் குருவிகள் என்றும், பல்வேறு நாடுகளில் இருந்து தொடர்ச்சியாக தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வருபவர்கள் என்றும் தெரியவந்தது.
- சுங்கத் துறையில் உள்ள சிலரின் ஒத்துழைப்போடுதான் கடத்தல் பொருட்கள் வெளியே சென்றிருப்பது உறுதிசெய்யப்பட்டது.
அதிகாரிகளிடம் விசாரணை
- இதையடுத்து, கடத்தல்காரர்கள் நகை, பொருட்களுடன் தப்புவதற்கு உதவியது தொடர்பாக 5 சுங்கத் துறை அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
- இதில் 2 அதிகாரிகள் கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
- இதைத் தொடர்ந்து, 2 சுங்கத் துறை அதிகாரிகளையும் டிஆர்ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
- இவர்களது உதவியுடன் சுங்கச் சோதனையில் இருந்து தப்பி, வெளியே எடுத்துச் செல்ல முயன்ற ரூ.5.5 கோடி மதிப்பிலான 12.6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
- அனைவரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
No comments:
Post a Comment