Saturday, February 22, 2020

அகத்திக்கீரையை எந்த உணவுடன் சாப்பிட கூடாது.

அகத்திக்கீரையை எந்த உணவுடன் சாப்பிட கூடாது
அகத்திக்கீரை


















அகத்திக்கீரையில் 63 வகை சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் 8.4 சதவீதம் புரதச்சத்து 1.4 சதவீதம் கொழுப்புச்சத்து 3.1 சதவீதம் தாது உப்புகள் மட்டுமின்றி மாவுச்சத்து இரும்புச்சத்து வைட்டமின் ஏ சி ஆகிய சத்துகளும் உள்ளன. பொதுவாக அகத்திக் கீரையில் இரண்டு வகை உள்ளது. அதில் ஒன்று வெள்ளை நிற பூக்களைக்கொண்டது. இன்னொன்று சிவப்பு நிற பூக்களை கொண்ட செவ்வகத்தி. இவை இரண்டின் இலை பூ பட்டை வேர் ஆகியவை மருந்தாக பயன்படுகின்றன.

அகத்திக் கீரையை சமைத்து சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகும். பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கும். உடல் சூடு தணிந்து கண்கள் குளிர்ச்சியாகும். மலச்சிக்கலை தடுக்கும். வயிற்றுப்புண் குணமாகும்.

சுத்தம் செய்யப்பட்ட அகத்தி கீரையுடன் சின்ன வெங்காயம் மிளகு சீரகம் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டுவந்தால் வயிற்றுப்புண் சரியாகும். இந்தக் கீரையின் சாற்றை சேற்றுப்புண்களில் பூசி வந்தால் விரைவில் ஆறிவிடும். நாள்பட்ட புண்களின் மீது கீரையை மட்டும் அரைத்து தடவி வந்தால் விரைவில் ஆறும். தேமல் வந்த இடங்களில் இதன் இலையை தேங்காய் எண்ணெயை விட்டு வதக்கி விழுதாக அரைத்துப் பூசி வந்தால் குணமாகும். இந்த கீரையின் சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்களின் மீது தடவினால் அவை காய்ந்து விழுந்துவிடும்.

அகத்திக் கீரையைப்போல அவற்றின் பூவும் மருத்துவ குணம் நிறைந்தது. பூவை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் தலைசுற்றல் சிறுநீர் மஞ்சளாகப்போவது போன்ற பிரச்சினைகள் சரியாகும். அகத்திப்பூவுடன் மிளகு சீரகம் ஓமம் பூண்டு வெங்காயம் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் இதய படபடப்பு கட்டுக்குள் வரும்.

மருந்துகளை முறிக்கும் தன்மை அகத்திக்கு உண்டு. எனவே சித்த மருந்துகள் சாப்பிடும்போது இதை சாப்பிடக்கூடாது. பொதுவாக இந்தக் கீரையை அடிக்கடி சாப்பிடக்கூடாது. அப்படிச் சாப்பிட்டால் மருந்தாக செயல்படவேண்டியது அதற்கு எதிராக செயல்பட்டு சொறி சிரங்கை ஏற்படுத்திவிடும் என்பார்கள்.

அகத்திக்கீரையையும் கோழிக்கறியையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது. மது அருந்திவிட்டும் இந்த கீரையை சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் மாரடைப்பு உள்ளிட்ட இதயம் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...