Friday, February 21, 2020

சென்னை போலீசாருக்கு 'கடிவாளம்' கட்டிய கமிஷனர்.

வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் இடையே ஏற்படும் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்

சென்னை போலீஸ் கமிஷனராக, ஏ.கே.விஸ்வநாதன் பதவி ஏற்றபின், சட்டம் - ஒழுங்கு மட்டுமல்லாமல், போக்குவரத்து துறையிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.சென்னை முழுவதும் அமைக்கப்பட்டு வரும், 'மூன்றாவது கண்' என அழைக்கப்படும், கண்காணிப்பு கேமராவை, அவரது முயற்சிக்கு உதாரணமாக கூறலாம். இதன் வாயிலாக பல குற்றச் சம்பவங்கள் தடுக்கப்பட்டுள்ளன. அதேபோல், குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண பேருதவியாக இருந்தது.
Image may contain: 1 person

இந்நிலையில், சமீப காலமாக போலீசார் தாக்கப்படும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறுகின்றன. குறிப்பாக, போக்குவரத்து போலீசாருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு கைகலப்பாக மாறின. இதையடுத்து, போலீசார் லஞ்சம் வாங்குகின்றனர் என்ற குற்றச்சாட்டை தடுக்கும் விதமாக, அபராதத் தொகையை, பணமில்லா டிஜிட்டல் முறையில் வசூலிக்கும் முறையை கொண்டு வந்தார்.

அதன்பின்னும், மோதல் சம்பவங்கள் தொடர்ந்ததையடுத்து, இதற்கு தீர்வு காணும் விதமாக, அபராதம் விதிக்கும் அனைத்து போக்குவரத்து போலீசாருக்கும், சட்டையில் கேமரா பொருத்தும் திட்டத்தை கொண்டு வந்தார். இதன் வாயிலாக, தகராறில் ஈடுபடுவோர் யார் என்பதை, காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.



கமிஷனரின் இந்த நடவடிக்கையால், போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகள் தகராறில் ஈடுபடுவது முற்றிலுமாக தடுக்கப்படும். கமிஷனரின் இந்த நடவடிக்கையை மக்கள் வரவேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...