தி.மு.க., உட்கட்சி தேர்தலுக்காக, நுாற்றுக்கும் மேற்பட்டோர், தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதில், மாவட்டச் செயலர்களுக்கு ஆதரவானவர்கள் அதிகம் உள்ளதால், தேர்தல் நியாயமாக நடக்குமா என்ற, கேள்வி எழுந்துஉள்ளது.தி.மு.க.,வில், 21ல், உட்கட்சி தேர்தல் துவங்கியது.
தேர்தலை முறையாக நடத்தி முடிக்க, கட்சி அமைப்பு ரீதியாக உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், மாவட்டச் செயலர் தலைமையில், ஐவர் குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இக்குழுவில் இடம்பெற்றுள்ள நுாற்றுக்கணக்கான நிர்வாகிகளின் பட்டியலை தயாரிப்பதற்கு, மூலக்காரணமாக இருந்தவர், அக்கட்சி தலைமை அலுவலகமான, அறிவாலயத்தில் கோலோச்சும் நிர்வாகி.இந்த நிர்வாகி, தனக்கு வேண்டிய மாவட்டச் செயலர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்களை தான், தேர்தல் மேற்பார்வை குழு உறுப்பினராக நியமித்துள்ளார்.

இரு கோஷ்டிகள்
ஒவ்வொரு மாவட்டத்திலும், இரு கோஷ்டிகளாக, கட்சியினர் செயல்படுகின்றனர். அதனால், மாவட்டச் செயலர் கோஷ்டிக்கு இருவர், எதிர் கோஷ்டியினருக்கு இருவர் என, நான்கு பேர், குழுவில் இடம்பெற வேண்டும் என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அவரது உத்தரவை காற்றில் பறக்கவிடும் வகையில், மாவட்டச் செயலர்களுக்கு பக்கபலமாக இருக்கக் கூடியவர்கள் மட்டும் தான், மேற்பார்வை குழுவில் இடம் பெற்றுள்ளனர். எதிர் கோஷ்டிக்கு ஆதரவாக செயல்படக்கூடிய யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால், 'மாவட்டச் செயலர்களின் ஆதரவாளர்கள், ஒருதலைபட்சமாக தேர்தலை நடத்தி முடிப்பர்; உட்கட்சி ஜனநாயகம் மறுக்கப்படும்' என, கட்சியினர் கவலை தெரிவித்துள்ளனர்.சட்டசபை தேர்தல் நேரத்தில், உட்கட்சி தேர்தல் நடப்பதால், நியாயமாக நடக்க வேண்டும் என, ஸ்டாலின் கருதுகிறார்.
வெற்றியை பாதிக்கும்
ஆனால், நடுநிலையாளராக இருக்க வேண்டிய மேற்பார்வை குழுவினர், ஒருதலைபட்சமாக செயல்பட்டால், கட்சிக்கு பின்னடைவு ஏற்படும்; சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் வெற்றியை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது என்றும், கட்சியினர் புலம்புகின்றனர்.இது குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:முதன்மை செயலர் கே.என்.நேரு மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டுள்ள இப்பட்டியலுக்கு, அவரது நிழலாக செயல்படும், அறிவாலய நிர்வாகி தான் காரணம். உட்கட்சி புகார்களை விசாரணை நடத்தும்போது, நேருவுடன் அறிவாலய நிர்வாகியும் அட்டை போல் ஒட்டிக் கொண்டிருப்பதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பு இல்லை.
புகாருக்கு ஆளாகிய மாவட்டச் செயலர்கள், தங்கள் ஊரில் உள்ள கோவில்களுக்கு, நேருவை அழைத்து சென்று, தங்கள் பதவியை காப்பாற்றி வருகின்றனர்.சமீபத்தில், விசாரணை நடத்திய, சில மாவட்ட செயலர் மீதான புகாரில், நியாயமான தீர்ப்பு கிடைக்கவில்லை என, நிர்வாகிகள் புலம்புகின்றனர். விசாரணை நடத்தும்போது, அறிவாலய நிர்வாகியை, அருகில் சேர்க்காமல், நேரு பார்த்துக் கொள்ள வேண்டும் என, கட்சியினர் விரும்புகின்றனர்.இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

'நமக்கு நாமே' பயணம் அடுத்த மாதம் துவக்கம்
சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், 'நமக்கு நாமே' பயணத்தை, அடுத்த மாதம், 29ல், காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில், ஸ்டாலின் துவக்குகிறார். இந்த பயணத்தை, பிரம்மாண்டமான மாநாடு போல் நடத்த, கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் அனைவரையும், 'நமக்கு நாமே' பயணத்தில், ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.
No comments:
Post a Comment