'கள்ளக் காதலியுடன் கும்மாளம் அடிக்கும் கணவர் மீது, ஸ்டாலினிடம் புகார் கூறியதால், கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்' என, தி.மு.க., நிர்வாகியின் மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை, அடையாறு, இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரம்யா, 28. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இவர் அளித்துள்ள புகார்:சந்தேகம்என் சொந்த ஊர், காஞ்சிபுரம். பாட்டியின் ஊரான, திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில் தங்கி, ஏழாம் வகுப்பு வரை படித்தேன். என்னுடன், அதே ஊரைச் சேர்ந்த சாரதிகுமாரும் படித்தார். சொந்த ஊருக்கு வந்து, 'ஆர்க்கிடெக்ட்' என்ற கட்டட கலை படிப்பு முடித்தேன். சாரதிகுமாரும், 'சிவில் இன்ஜினியரிங்' படித்தார். இருவரும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன், 2016 பிப்., 10ல் திருமணம் செய்தோம்; இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. என்னை திருமணம் செய்வதற்கு முன், சாரதிகுமார், சேலத்தில், சட்ட கல்லுாரியில் சேர்ந்துள்ளார். அப்போது, அவருக்கு, அவரை விட, 15 வயது மூத்தவரான, சத்யபிரியா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சத்யபிரியாவுக்கு திருமணமாகி, கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். எனினும், என் கணவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளார். வரதட்சணையாக, என் பெற்றோர் கொடுத்த, 140 சவரன் நகை, 20 லட்சம் ரூபாயை, என்னிடம் இருந்து அபகரித்து, கள்ளக் காதலியிடம் கொடுத்தார்;. இது, எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நான் கர்ப்பமானேன். அந்த சமயத்தில், சாரதிகுமார் மற்றும் சத்யபிரியாவின் ஆட்டம் அதிகமானது. என் கணவர், வாணியம்பாடி நகர தி.மு.க., செயலர் என்பதால், அவர் பதவி மற்றும் குடும்ப கவுரவம் கருதி, வெளியில் சொல்லாமல் இருந்தேன். தொடர்புபிரசவத்திற்கு, என் தாய் வீட்டுக்கு கூட அனுப்பவில்லை. சேலத்தில், சத்யபிரியாவின் வீட்டில் தான், எனக்கு பெண் குழந்தை பிறந்தது.
அங்கு இருக்க பிடிக்காமல், இரண்டு நாட்களில், வாணியம்பாடிக்கு வந்து விட்டேன். என் கணவருக்கு, சத்யபிரியா மட்டுமின்றி, வேறு சில பெண்களுடனும் தொடர்பு இருப்பதால், காஞ்சிபுரத்தில் உள்ள, பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டேன்.நடவடிக்கைஉயிருக்கு பயந்து, தற்போது, சென்னை, அடையாறில் உறவினர் வீட்டில் தங்கி உள்ளேன்.சத்யபிரியாவுடன் சேர்ந்து, என் கணவர் கும்மாளம் போடுவது பற்றி, இம்மாதம், 19ம் தேதி, தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம் புகார் அளித்தேன்; நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இதையடுத்து, என் கணவர், தாலியை கழற்றி கொடுக்குமாறு, கழுத்தில் கத்தியை வைத்து, கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment