சமையல் குறித்து, பிரபல சமையல் கலைஞர், 'செப்' தாமு: சென்னை தான் எனக்கு சொந்த ஊர். அப்போ எங்க வீட்டில், விறகடுப்பு தான்.
கூட்டுக்குடும்பம் என்பதால், கேப்பைக்கூழ், கருவாட்டுக் குழம்பு, கம்பங்களி, நாட்டுக்கோழி மசால் என, பாரம்பரிய சாப்பாட்டுக்கு பஞ்சமே இருக்காது.
எப்போதும், வீட்டில்எல்லாரும் ஒன்றாகவே உட்கார்ந்து சாப்பிடுவோம்.அந்த காலத்தில் எதுவுமே, 'ரெடிமேட்' கிடையாது. குழம்புக்கு மசாலா, தோசை மாவு, சட்னி, இடியாப்பம் என, எல்லாமும் கையால் அரைச்சு தான் செய்வாங்க.
எப்போதும், வீட்டில்எல்லாரும் ஒன்றாகவே உட்கார்ந்து சாப்பிடுவோம்.அந்த காலத்தில் எதுவுமே, 'ரெடிமேட்' கிடையாது. குழம்புக்கு மசாலா, தோசை மாவு, சட்னி, இடியாப்பம் என, எல்லாமும் கையால் அரைச்சு தான் செய்வாங்க.
அதனால், அந்த சுவை இன்னமும் என் நாவில் உள்ளது. எங்க அம்மாவும், அண்ணியும் சமையல் செய்வாங்க; சாதாரணமாக சாம்பார் தான் செய்வாங்க; அதை, இரண்டு மணி நேரம் செய்வாங்க;
அவ்வளவு ருசியாக இருக்கும். நான் சின்னப் பையனாக இருந்த காலத்திலிருந்தே, எனக்கு சமையல் செய்வது ரொம்ப பிடிக்கும்; அதுபோல, சாப்பிடுறதும் ரொம்ப இஷ்டம். அதனால், சமையல் கலை படிக்கத் துவங்கினேன். அப்போது தான், புதுப் புது உணவுகளை செய்வது குறித்து அறிந்து கொண்டேன்.
சாப்பாடு தான் ஒரு மனிதனுக்கு, வாழ்க்கையில் முக்கியமான விஷயம். என்ன தான் வீடு, சொத்து, சுகம் இருந்தாலும், சாப்பாடு சரியில்லைன்னா, அந்த வாழ்க்கைக்கே அர்த்தம் இல்லாமல் போய் விடும். ஒரு வேளையாவது, திருப்தியாக சாப்பிடுவதில் தான், வாழ்க்கையோட திருப்தியே இருக்கிறது.
சமையல் செய்வது ஒரு கலை. அதை செய்வதற்கு பலரும் கஷ்டப்படுகின்றனர். ஆனால், சமைப்பதை நான் மிகவும் விரும்பி செய்வேன்.
எனக்கு வேறு எந்த பொழுதுபோக்கும் கிடையாது; எப்போதும், சமையல் சமையல் தான். குழந்தைகளுக்கு சமைக்க சொல்லிக் கொடுங்க. எப்படி, நல்ல படிப்பு படிக்க வைக்கிறோமோ அதுபோல, நல்லா சமைக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும். சமைக்கும் பெண்களுக்கு, இப்போது நிறைய கவனச் சிதறல் இருக்குது.
அதனால், சமையல் ருசியில்லாமல் போய் விடுகிறது. எல்லாரும் தயவு செய்து, பாரம்பரியத்திற்கு மாற வேண்டும். வீட்டில் எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுங்க. பாரம்பரிய உணவுகளை வீட்டில் சமைத்து உண்ண வேண்டும்; குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
பாரம்பரிய உணவுகளில் சுவை மட்டுமின்றி, நிறைய சத்துகளும் உள்ளன; மருத்துவ குணங்களும் நிரம்பியுள்ளன.தினமும் சாப்பாட்டில் கொத்தமல்லித் தழை, புதினா, இஞ்சி, பூண்டு, தனியா, மிளகாய், மஞ்சள் துாய் எல்லாம் சேர்த்துக் கொண்டாலே, உடல் நலமின்றி போதல், டாக்டரை சந்தித்து ஆலோசனை கேட்டல் போன்ற எதற்கும் அவசியம் இருக்காது
வாழ்கவளமுடன்.
No comments:
Post a Comment