Saturday, February 29, 2020

கால்சியம் நிறைந்த ராஜ்மா - பாசிப்பருப்பு அடை.

தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி - ஒரு கப்
ராஜ்மா - அரை கப்
இஞ்சி - சிறு துண்டு
பாசிப்பருப்பு - ஒரு கப்
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
பச்சை வேர்க்கடலை - ஒரு கப்
மிளகு - 2 டேபிஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - ஒரு கிண்ணம்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

ராஜ்மா - பாசிப்பருப்பு அடை

செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரிசியுடன் ராஜ்மா சேர்த்து ஊற வைக்கவும்.

ஊறியதும் தண்ணீர் வடித்து இஞ்சி, மிளகு சேர்த்து அரைக்கவும்.

பாசிப்பருப்பு, வேர்க்கடலை உளுத்தம்பருப்பையும் ஊறவைத்து தனியாக அரைத்து எல்லா மாவையும் சேர்த்துக் கலக்கவும்.

உப்பு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் மிதமான தீயில் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
மிகவும் சத்து நிறைந்தது இந்த ராஜ்மா - பாசிப்பருப்பு அடை அடை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...