மயிலாடுதுறை-பூம்புகார் சாலையில் 15கிமி தூரத்தில் உள்ளது கருவிஎனஅழைக்கப்படும் கருவிழுந்தநாதபுரம்.
இப்புவியில் உயிர்கள் பிறக்கமுதல் ஆதார கரு வித்து இங்குதான் விழுந்ததாம்.
நாத விந்து கலாதி. கலை ஆதி. நாதம், விந்து, கலை ஆகிய மூன்றுக்கும் ஆதி. சிவசக்தியால் உந்தப்பட்ட கரு, சொல்லெணா இயக்கம் உடையதாகச் சுழல, அதன் கணின்றும் ஒரு நாதம் உண்டாகும்; அந்நாதம் அசுத்த மாயையின் அணுக்களைத் திரட்டி, உலகங்களைப் படைக்கும் சிவசக்தியால் இயக்கப்பட்ட விந்து சுழன்று இயங்குங்கால் வட்ட வடிவும் அவ்வட்ட வடிவினின்று தோன்றும் நாதம் வரிவடிவும் உடையதாம். இவ்விந்து நாதங்களின் சேர்க்கையைத்தான் 'உ' பிள்ளையார் சுழியென முதல் உலக தோற்றத்திற்குக் காரணமென்பதைப் புலப்படுத்த முதலில் தீட்டப்படுகிறது. இதன் அறிகுறியே சிவலிங்கமுமாம்.
கரு வித்து நாதம் புரம்= கருவித்துநாதபுரம்
இவ்வூரில் உள்ள NH சாலை சீர்காழி நோக்கி பிரியும் இடத்தில் உள்ள சாலையில் காவிரிக்கரைவரை சென்று அதன் கரை ஓரம் சென்றால் பெரும்புதர் நடுவில் இந்த இடந்தில் கோயில்உள்ளது. இறைவனை தவிரஅனைத்து மூர்த்திகளும் தனி ஒட்டு கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன. அருவுருவமானவன் மிகஅழகாக பளிங்கு கல்லால் செதுக்கப்பட்டு இப்போது கூட கண்ணாடியால் செய்தது போல் இருக்கிறான்.
புதன் தலம், கேதுதலம், செவ்வாய்தலம் என அனைத்து கோயில்களுக்கும்இவ்வூர் வழியாகவே படை எடுக்கின்றனர்., ஒருவருக்கும்நின்றுநிதானிக்க நேரமில்லை..
நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவ சக்தி....
No comments:
Post a Comment