இரவும் உணவு உண்ட பின் ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுவதால் செரிமான சக்தி அதிகரிக்கும்.
சர்க்கரை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு வரை நம் உணவில் வெல்லம்தான் மிக முக்கிய இனிப்புப் பொருளாக பயன்படுத்தப்பட்டது.
வெயில் நாட்களில் கூட வெல்லத்தை தண்ணீரில் கரைத்து அதோடு கொஞ்சம் ஏலக்காய் தட்டிப்போட்டு மணக்க மணக்க குடிப்பார்கள். ஏன் தெரியுமா..?
செரிமானத்திற்கு நல்லது : இரவும் உணவு உண்ட பின் ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுவதால் செரிமாண சக்தி அதிகரிக்கும். அதுமட்டுமன்றி நம் விருந்து பழக்கத்திலும் இலையில் முதலில் கொஞ்சம் வெல்லம் வைப்பார்கள்.
சாப்பிட்ட விருந்து உணவு செரிமானம் அடையவே இறுதியாக சாப்பிடவே அந்த வெல்லம் வைக்கிறார்கள். மற்ற நேரங்களில் குடிக்கும் தண்ணீரிலும் ஒரு கட்டி வெல்லம் கலந்து குடித்தாலும் செரிமானத்திற்கு நல்லது.
உடல் சூட்டை தணிக்கும் : வெல்லம் உடலை குளுர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். அதனால்தான் வெயில் நாட்களில் பானகம் என்ற பெயரில் வெல்லம் கலந்த நீர் குடிப்பார்கள்.
கல்லீரலை பாதுகாக்கும் : கல்லீரலின் வேலை உடலின் பிரதானமானது. அதுதான் உடலை சுத்தப்படுத்துதல், உறுப்புகளுக்கு தேவையான கெமிக்கல், ஊட்டச்சத்துகளை பிரித்து அனுப்பும் வேலையைச் செய்கிறது. எனவே அந்த கல்லீரலை சுத்தமாகவும், பாதுகாப்பானதாகவும் வைத்துக்கொள்ள வெல்லம் உதவுகிறது.
ஊட்டச்சத்து சமநிலை செய்யும் : பொட்டாசியம், எல்க்ட்ரோலைட்டுகளும் வெல்லத்தில் இருப்பதால் இளநீர், ஸ்போட்ர்ஸ் ட்ரிங்குகளுக்கு இணையான ஆற்றலை உடலுக்கு அளிக்கும். உடல் சுருசுருப்புக்காகவும் வெல்ல நீர் அருந்த வேண்டும்.
இரத்தத்தை சுத்திகரித்தல் : வெல்லம் இரும்பு சத்து நிறைந்ததால் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. இரத்தத்தையும் சுத்திகரிப்புச் செய்வதால் நோய் பாதிப்புகளும் வராது. மேலும் இதில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் அமிலத்தின் அளவை பராமரித்து இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் : இரும்பு சத்து நிறைந்த வெல்லம் துத்தநாகம் மற்றும் செலினியம் அதோடு நச்சு நீக்கியையும் கொண்டுள்ளதால் உடலை எந்த நோயும் தீண்டாது.
வலி நிவாரணி : வெல்லம் சாப்பிடுவதால் எண்டோர்ஃபின்கள் வெளியேறும். இது சுரப்பதால் வலிகள் ஏற்படுமாயின் அதைப் போக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் முடக்கு வாதம், மூட்டு வலி, வீக்கம் கொண்டோர்கள் தொடர்ந்து வெல்லம் எடுத்துக்கொள்வதால் அவர்களுக்கு அனைத்து பிரச்னைகளும் சரியாகும்.
குடல் வலிமைக்கு நல்லது : வெல்லத்தில் அதிக அளவு மெக்னீசியம் இருப்பது குடலை வலுப்படுத்த உதவும். 10 கிராம் வெல்லத்தில் 16 கிராம் மெக்னீசியம் இருப்பதால்..மெக்னீசியக் குறைபாடும் இருக்காது.
உடல் எடைக் குறையும் : உடல் எடை அதிகரிக்க சர்க்கரையும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. அதற்கு நல்ல மாற்று வெல்லம். மேலே குறிப்பிட்ட அனைத்தும் சரியாக செயல்பட்டாலே உடல் எடை தானாக கட்டுப்பாட்டில் இருக்கும்.
No comments:
Post a Comment