Sunday, February 23, 2020

பூமி உள்ளவரை ஜெ., புகழ் நிலைத்திருக்கும்:இன்று, ஜெயலலிதா பிறந்த நாள்.

இந்திய பெண் அரசியல்வாதிகளில் முத்திரை பதித்தவர், ஜெயலலிதா. கடின உழைப்பால் சினிமா, அரசியல் வானில் உச்சம் தொட்டவர். இவரது பிறந்த தினம் - பிப்., 24, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக, இந்த ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படுகிறது.
 பூமி உள்ளவரை ஜெ., புகழ் நிலைத்திருக்கும்:இன்று, ஜெயலலிதா பிறந்த நாள்

கர்நாடகாவின் மைசூரில், 1948 பிப்., 24ல் பிறந்தார். இளம் வயதில் பரத நாட்டியம், கர்நாடக இசையில் பயிற்சி பெற்றார்; சென்னையில் பள்ளி படிப்பை முடித்தார். குடும்ப சூழல், இவரை சினிமாவில் நுழைத்தது. தன் திறமையால், 17 ஆண்டுகள் சினிமாவில் கோலோச்சினார். எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா ஜோடி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.


அரசியல் நுழைவு


எம்.ஜி.ஆர்., வழிகாட்டுதல்படி, 1982ல் அ.தி.மு.க., அடிப்படை உறுப்பினரானார். 1983ல் கொள்கை பரப்புச் செயலரானார்.கடந்த, 1983ல் திருச்செந்துார் இடைத்தேர்தல் வெற்றிக்கு உதவினார். 1984ல் ராஜ்யசபா எம்.பி., ஆனார். கடந்த, 1984 டிசம்பரில், அமெரிக்காவில், எம்.ஜி.ஆர்., சிகிச்சை பெற்ற போது நடந்த லோக்சபா, சட்டசபை தேர்தல்களில், அ.தி.மு.க., -அமோக வெற்றி பெற்றது; இதில், ஜெயலலிதாவின் பங்கு முக்கியமானது.
எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், 1988ல் ஜெ., - ஜானகி அணி என, அ.தி.மு.க., இரண்டாக உடைந்தது. 'இரட்டை இலை' சின்னம் முடக்கப்பட்டது.

கடந்த, 1989 சட்டசபை தேர்தலில், ஜெ., தலைமையிலான, அ.தி.மு.க., 'சேவல்' சின்னத்தில் போட்டியிட்டு, 27 இடங்களில் வென்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. போடி தொகுதியில் வென்ற ஜெயலலிதா, முதல் பெண் எதிர்க்கட்சி தலைவரானார்.பின், ஜானகி ஒதுங்கிக் கொள்ள, அ.தி.மு.க., ஒன்றிணைந்தது.



இமாலய வெற்றி


அ.தி.மு.க., கூட்டணி, 1991 தேர்தலில், 225 தொகுதிகளில் இமாலய வெற்றி பெற்றது. முதன் முறையாக, ஜெயலலிதா முதல்வரானார். 2001, 2011 தேர்தல்களில் வென்று முதல்வரானார். கடந்த, 2016 தேர்தலில், 136 தொகுதிகளில் வென்று, எம்.ஜி.ஆருக்கு பின், தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராகி சாதித்தார். 2016 செப்., 22ல் உடல்நலம் பாதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின், டிச., 5ல் மறைந்தார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...