சட்டசபை தேர்தலில் நகர்ப்புறத்தில் தி.மு.க., அதிக தொகுதிகளை கைப்பற்றியது. தமிழகத்தில் 154 கிராமப்புறம், 30 சிறுநகரம், 50 நகர்ப்புற பகுதிகள் உள்ளன. இதில், நகர்ப்புறத்தில் 50ல் 40 தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது. இதன் 'ஸ்டிரைக் ரேட்' 80 சதவீதம். கிராமப்புறத்தில் 96, சிறுநகரங்களில் 23ல் வென்றது.
* அ.தி.மு.க., கூட்டணி கிராமப்புறத்தில் 58, சிறுநகரத்தில் 7, கிராமப்புறத்தில் 10ல் வென்றது.
* ஒட்டுமொத்தமாக தி.மு.க., கூட்டணி 45.4 சதவீத ஓட்டுகளை பெற்றது. அ.தி.மு.க., கூட்டணிக்கு 39.7 சதவீதம் கிடைத்தது. 5.7 சதவீதம் முன்னிலை பெற்ற தி.மு.க.,வுக்கு 84 இடங்கள் கூடுதலாக கிடைத்தன.
* தி.மு.க., கூட்டணி கிராமப்புறத்தில் 44.9, சிறுநகரத்தில் 45.8, கிராமப்புறத்தில் 46.6 சதவீத ஓட்டு பெற்றன. அ.தி.மு.க., கூட்டணி கிராமப்புறத்தில் 41.8, சிறுநகரத்தில் 37.2, கிராமப்புறத்தில் 34.8 சதவீத ஓட்டு பெற்றன.
நகரில் ம.நீ.ம., ஆதிக்கம்
கமலின் ம.நீ.ம., 2.7 சதவீத ஓட்டு பெற்றது. இதில் கிராமப்புறத்தில் 1.2, சிறுநகரத்தில் 3.3, நகர்ப்புறத்தில் 7.2 சதவீத ஓட்டு பெற்றது. மற்ற கட்சிகள் கிராமப்புறத்தில் 12.2, சிறுநகரத்தில் 13.7, நகர்ப்புறத்தில் 11.3, சதவீத ஓட்டு பெற்றன. ஒட்டுமொத்தமாக 12.2 சதவீத ஓட்டு பெற்றன.
2016ல் எப்படி?
2016, சட்டசபை தேர்தலில் கிராமப்புறத்தில் அ.தி.மு.க., 94 தொகுதிகளை வென்றது. இதன் 'ஸ்டிரைக் ரேட்' 61 சதவீதம். சிறுநகரத்தில் 17, நகர்ப்புறத்தில் 23 இடங்களில் வென்றது. தி.மு.க., கூட்டணி கிராமப்புறத்தில் 59, சிறுநகரத்தில் 12, நகர்ப்புறத்தில் 27 இடங்களில் வென்றன. அ.தி.மு.க., 40.8, திமுக கூட்ணி 39.7 சதவீத ஒட்டு பெற்றன. இதன் வித்தியாசம் 1.1 சதவீதம் தான். இதில் கிராமப்புறத்தில் அ.திமுக 41.1, திமுக 39.5 சதவீத ஓட்டு பெற்றன. சிறுநகரத்தில் அ.தி.மு.க., 39.9, தி.மு.க., கூட்டணி 39.3 சதவீத ஓட்டு பெற்றன. நகர்ப்புறத்தில் தி.மு.க., கூட்டணி 40.7, அ.தி.மு.க., 40.4 சதவீத ஓட்டு பெற்றன. அப்போதும் நகர்ப்புறத்தில் தி.மு.க., சிறிய அளவில் முன்னிலை வகித்தது.
No comments:
Post a Comment