திதி என்று அவ்வப்போது அன்றாட வாழ்க்கையில் இந்த வார்த்தையை கேள்விப்பட்டிருக்கிறோம்.
மேலும், திதி என்றால் பஞ்சாங்கத்தில் மட்டுமே சம்பந்தப்பட்ட சொல்லாக தான் பார்த்திருக்கிறோம்.
ஆனால், திதி என்றால் தேதி. அவ்வளவே
ஆங்கிலத்தில், தேதியை நம்பர்(1,2,3..30,31) வைத்து குறிப்பது போல, நாம் தேதியை திதியின் பெயரை வைத்து குறிக்கிறோம்
பட்சம் என்றால்?
சந்திரனின் ஒட்டத்தை வைத்து தான் திதிகள்.
திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார்.
அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை வளர்பிறை திதிகளாகவும், பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை தேய்பிறை திதிகளாகவும் கணக்கிடப்படும்.
அந்த வளர்பிறை நாட்களை பொது பெயராக சுக்கில பட்சம் என்றும், தேய்பிறை நாட்களை கிருஷ்ண பட்சம் எனப்படும்
திதிகளின் பெயர்கள்
பௌர்ணமி, பிரதமை, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி (பிரதோஷம்), சதுர்த்தசி, அமாவாசை மறுபடியும் பிரதமையிலிருந்து தொடங்கும்.
No comments:
Post a Comment