Saturday, September 18, 2021

நாம_விவரம்_தெரியாம_இருந்தா_ஏன் #ஏமாத்த_மாட்டாங்க?

 வருடம் தோறும் விழாக்கால சலுகையாக தீபாவளி, பொங்கல் பண்டிகைகள் நேரம், மக்கள் கதர் ஆடை வாங்குவதை ஊக்குவிக்கும் விதத்தில் முப்பது முதல் ஐம்பது சதவீதம் வரை தள்ளுபடி வழங்கி தமிழக கைத்தறி துறை மூலம் அறிவிப்புகள் வெளியிடப்படும். இதற்காக சிறப்பு கண்காட்சிகள் ஆங்காங்கே நடத்தப்படும்.

தள்ளுபடி என்றதும் அந்த நேரங்களில் விலையை ஏற்றி பின்னர் குறைப்பது போல குறைத்து காட்டி எப்போதும் போன்ற விலைக்கு விற்பது போன்றது அல்ல!
ஒரு சேலையின் விலையானது உற்பத்தி கூடத்தில் அரசினால் கொள்முதல் செய்யப்படும் இடத்திலேயே நூலின் விலை, நெசவாளரின் கூலி, உற்பத்தி செலவு, ஆகியவற்றின் அடிப்படையில் அரசு கொள்முதல் செய்யும். அதன் பின்னர் அரசிற்கான மார்ஜினாக ஒரு குறிப்பிட்ட சதவீத தொகை சேர்க்கப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்படும். பின்னர் தரக் கட்டுபாட்டுக்கான சில்க் மார்க் முத்திரை பதிக்கப்பட்டு அந்த சேலையை நெய்த நெசவாளரின் புகைப்படத்துடன் கூடிய டேக் இணைக்கப்பட்டு விற்பனை மையம் வரும். ஒருமுறை விலை முடிவு செய்யப்பட்டுவிட்டால் அதில் என்த மாற்றமும் செய்யமுடியாது!
அரசு விழாக்கால சலுகை அறிவிக்கும் போது உண்மையாகவே அதன் நிஜ விலையில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் குறைத்துதான் விற்பனை செய்வார்கள். எனவே அது நிஜமான தள்ளுபடி தான், வாங்குபவர்களுக்கு நிஜமான லாபம்தான். சரியான விலையை விட குறைத்து வழங்கும் போது அந்த துறைக்கு நஷ்டம் வரும்தானே. அதனை ஈடு செய்தாக வேண்டும் அல்லவா? எனவே அந்த தொகையை கைத்தறி துறைக்கு அரசு வழங்கும். அப்படித்தான் நஷ்டம் ஈடு செய்யப்படுகிறது.
இதில் ஆச்சர்யம் என்ன உள்ளது என்கிறீர்களா? சில நாட்களுக்கு முன்பு நம் தமிழக கணக்குப்பிள்ளை நாம் மாநில அரசுக்கு சேரவேண்டிய வரி பணத்தை எல்லாம் மத்திய அரசு ஜிஎஸ்டியாக பிடுங்கி வேறு மாநிலங்களுக்கு கொடுத்து விடுகிறது என்று மூக்கு சிந்தி கண்ணீர் விட்டது நாம் அனைவரும் அறிந்ததே! பெட்ரோல் விலை கூட அப்படித்தான் ஏறுகிறது என்று கூப்பாடு போட்டது கூட நியாபகம் இருக்கும்.
இங்கே பிடுங்கி எங்கேயோ கொடுப்பது போல அவர் பேச்சு இருந்தது. ஆனால் உண்மையை சொல்லப்போனால் மாநில அரசு அறிவிக்கும் ஒவ்வொரு நலத்திட்டங்களிலும் மத்திய அரசின் பங்களிப்பு நிச்சயம் உண்டு. அதை தமிழக அரசு ஒருபோதும் வெளியில் சொல்வதில்லை. இலவச வீட்டு மனை திட்டம் முதல் செல்வமகள் சேமிப்பு திட்டம் வரை எல்லாவற்றிலும். இந்த திட்டங்களை செயல்படுத்துவது மட்டுமே மாநில அரசின் வேலை. பெரும் நிதி ஆதாரம் வழங்குவது மத்திய அரசுதான்.
இந்த கைத்தறி விழாக்கால சலுகையிலும் கூட மத்திய அரசின் பங்களிப்பு உள்ளது நிச்சயம் யாரும் அறியாதது. நேற்று ஒரு கைத்தறி பட்டு சேலை வாங்கினேன். தீபாவளி சலுகையாக 30% தள்ளுபடி என்று சொல்லி இருந்தார்கள். அதன் விலை ரூ.9150 டிஸ்கவுண்ட் ரூ.2745, அது போக
ரூ.6405 என பில் போட்டு கொடுத்தார்கள். அந்த டிஸ்கவுண்ட் தொகையை இரண்டாக பிரித்து காட்டி இருந்தார்கள். வட்டமிட்டு காட்டியுள்ளேன். எனக்கு அது என்னவென்று புரியவில்லை. இது ஏன் இப்படி பிரித்து எழுதியுள்ளீர்கள் என்று கேட்டபோது, அந்த டிஸ்கவுண்ட் தொகையில் 15% மத்திய அரசின் தொகை, 15% மாநில அரசின் தொகை. அதாவது இவர்கள் மத்திய, மாநில அரசிடம் கிளைம் வேண்டிய தொகையை ஆவணப்படுத்த வசதியாக பிரித்து காட்டி உள்ளார்கள். நிச்சயம் இதற்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
நான் வாங்கும் ஒரு சேலைக்கு மத்திய அரசு ரூ.2745 ல் 1372 ரூபாய் எனக்கு பதிலாக விற்பனை செய்பவருக்கு வழங்குகிறது. அதாவது நான் ஏதேதோ வழிகளில் மத்திய அரசுக்கு செலுத்தும் வரிப்பணம் நிச்சயம் பலவழிகளில் பல மடங்காக என்னையையும் அறியாமல் என்னிடமே திரும்ப வருகிறது என்பதுதான் நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது. இப்படி ஒவ்வொரு சலுகைகளையும் நாம் ஒழுங்காக கணக்கிட்டு பார்த்தோமானால் நிச்சயம் நாம் கட்டும் வரியை வரியை விட நாம் பெரும் சலுகைகள் அதிகம் இருக்கும் என்றே தோன்றுகிறது.
ஆக இப்படித்தான் மத்திய அரசின் சின்ன சின்ன விஷயங்கள் கூட மக்களிடம் மறைக்கபடுகிறது. இதில் தற்போதைய அரசினை மட்டும் குறை கூறுவதில் அர்த்தம் இல்லை. இது பல ஆண்டுகளாக திராவிட ஆட்சியாளர்களால் செய்யப்பட்டு வருவது. இது நாள் வரையிலும் ஒன்றும் தெரியாமல் திரையில் தோன்றியதையும், மேடையில் முழங்கியதையும் கேட்டு பார்த்து ஏமாந்து விட்டோம். இனியாவது நாம் பெரும் ஒவ்வொரு சலுகையையும் அதன் ஆதி முதல் அந்தம் வரை அறிந்து இந்த நாட்டுக்காக, நாட்டு மக்களின் நலனுக்காக உண்மையான அக்கறை கொண்டு செய்பவர்கள் யார், லேபிள் ஒட்டி போட்டோ ஷூட் நடத்தி விளம்பரம் தேடிக்கொள்ளும் வெற்று வேட்டுக்கள் யார் என்பதை இனங்கண்டு கொள்வோமே ....
நீங்க மட்டும் தான் பெட்ரோலுக்கு டீடெயில் சொல்லுவீங்களா? நாங்களும் சொல்லுவோம்ல டீடெயில்லு...
😅😅😅
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...