''தவறுகளை ஒப்புக் கொள்வோம் ..''
மனிதனாகப் பிறந்தவர் எவருமே தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் அல்ல.
ஆனால் தவறு என்று உணர்ந்தப் பின், அந்தத் தவறை ஒப்புக் கொள்ளத் தயாராக இருக்கிறாமோ என்பது தான், நம்மை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தும்.
செய்தது தவறா, தவறில்லையா? என்பது கூடப் பிரச்சனையல்ல.. அதை ஒப்புக் கொள்கிற அகங்கார நினைப்பு தான் நமக்குப் பிரச்சனை!
குழந்தையாக இருந்த போது எவ்வளவு வளைந்து கொடுத்தோம்?நம்மை அடித்தவரிடமே கூட எந்த வன்மமும் இல்லாமல் திரும்ப அவர்களிடம் சென்றோம்...
அப்போது அந்த மகிழ்ச்சி எப்படி இருந்தது..?
ஆனால் இப்போது வளர, வளர உடல் அளவிலும், மனதளவிலும் நாம் இறுகி விட்டோம். சமூகத்தில் நமக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு விட்டோம்.
அதனால் தான் நாம் நமது தவறுகளை ஏற்றுக் கொள்ளும் அடிப்படை குணத்தைக் கூட இழந்து விட்டோம்..!
தவறை உணர்ந்த பின்னும், வெளிப்படையாக ஏற்கத் துணிவு இல்லாமல், மேலும் அதை நியாயப்படுத்திக் கொண்டு இருப்பது தான் தவறு.
நாம் செய்த தவறை மற்றவர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டாலும், நம் தவற்றை ஒப்புக் கொள்ளாமல் அதை நியாயப்படுத்த மேலும் மேலும் வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போகின்றோம் நம்மில் சிலர்.
இந்த மனப்பான்மை மிகவும் அபாயகரமானது!
என்ன தவறு செய்தாலும் அதை நேர்மையாக ஒப்புக் கொள்வோம்.அது நம்மைப் பற்றிய நன்மதிப்பைத் தான் கூட்டும்.
சிலர் நம் தவறுகளை பூதக் கண்ணாடியால் பார்க்கக் கூடும்,பார்த்து விட்டுத் தான் போகட்டுமே!
நாம் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால், நம் யுத்தம் அங்கேயே முடிந்து, நம் மீது குற்றம் சுமத்தியவர் அல்லவா குற்ற உணர்வை சுமப்பார்?
புரிந்து கொள்ளுங்கள்.. இது விட்டுக் கொடுப்பதோ,
தோற்றுப் போவதோ அல்ல! நம் மனம் பக்குவப்பட்டு இருக்கிறது என்று அர்த்தம்....
வியாபாரம் செய்தாலும், விளையாட்டாக இருந்தாலும், தவறுகளை எற்றுக் கொள்ளவதைப் பொறுத்துத் தான் வாழ்க்கையில் வெற்றி அமைகிறது.
தவற்றை ஒப்புக் கொள்ளாத வரை, மனதிற்குள் சிலுவை போல் நம் குற்ற உணர்வைத் தேவை இன்றி சுமக்க நேரிடும்.
தவறுகளை ஒப்புக் கொள்வது என்பது, எதிரிகளையும் நண்பர்களாக்கித் தரும் பலம். எதிர்த்து வீழ்த்த முடியாத பலம். வாழ்க்கையில் நம்மை அடுத்தப் படிக்கு அழைத்துச் செல்லும் பலம்!
ஆம்.,நண்பர்களே..,
மற்றவர்களின் தவறுகளை மன்னித்து விடுவோம்.
மற்றவர்களைப் பற்றி குறை சொல்வதை நிறுத்துவோம்..
எல்லோரிடமும் பேதம் பார்க்காமல் பழகுவோம்..
புதிய நட்புகளை ஏற்படுத்திக் கொள்வோம்.
No comments:
Post a Comment