ஒரு அநியாயக்கார அரசன் ஒருவன் ஒரு அப்பாவிக் குடிமகனைக் கைது செய்து *மூன்று சதுரமீட்டர் மாத்திரமே பரப்பளவான ஒரு தனிச் சிறையில்* அடைக்கும்படி கட்டளையிட்டான்.
நிரபராதியான அந்த குடிமகன் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தான்.
*"நான் நிரபராதி, ஏன் என்னைக் கைது செய்தீர்கள்? ஏன் என்னைச் சிறையில் அடைத்தீர்கள்?"*
என்று உரக்கக் கதறினான்.
பின்னர் அவனை *ஒரு சதுரமீட்டர் மாத்திரமே விசாலமான ஒரு தனிச் சிறையில்* அடைக்கும்படி கட்டளை வந்தது.
மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்தான். ஆனால் இம்முறை *"நான் நிரபராதி"* என்ற வாதத்தை மறந்துவிட்டான். *"இது என்ன கொடுமை! இந்தச் சிறையில் எப்படி இருப்பது! உறங்குவது! அமர்ந்து கொண்டுதானே உறங்க முடியும்! இது உங்களுக்கே தப்பாகத் தெரியவில்லையா?"*
எனக் கதறினான்.
சினம் கொண்ட காவலர் இன்னும் *நான்கு சிறைக் கைதிகளை* அவனோடு சேர்த்து அந்தச் சிறிய கூட்டில் அடைத்துவிட்டான்.
இப்போது ஐந்து பேரும் இணைந்து கூக்குரலிட்டனர். *"எங்களால் முடியாது. நாங்கள் மூச்சுத்திணறி செத்துவிடுவோம். உங்களுக்கு ஈவிரக்கம் எதுவும் இல்லையா?"*
என புலம்பினார்கள்.
மேலும் சினம் கொண்ட காவலர் ஒரு *பன்றியை* அவர்களோடு சிறையில் அடைத்து விட்டான்.
விரக்தியடைந்த அவர்கள், *"நாங்கள் இந்த அசிங்கத்தோடு இந்தச் சிறிய கூட்டில் எப்படி இருப்பது! தயவுசெய்து இந்த பன்றியை மாத்திரமாவது வெளியே எடுத்துவிடுங்கள் "* எனக் கெஞ்சிக்கேட்டனர்.
தயவு காட்டிய காவலர் *பன்றியை* வெளியே எடுத்தான்.
அடுத்த நாள் அரசன் அந்தப் பக்கமாக வந்து *"இப்போது உங்கள் நிலை எப்படி?"* என்று விசாரித்தான்.
*"நாங்கள் நல்ல சுகமாக இருக்கிறோம். எங்கள் பெரிய பிரச்சினை தீர்ந்துவிட்டது"* என்று பதில் கூறினார்கள்.
இப்படித்தான் *எமது நாடுகளில் பன்றிமயக் கோட்பாடு அமுல்படுத்தப் படுகிறது.* பன்றியை மாத்திரம் எடுத்து விட்டால் போதும் என்ற கோரிக்கையில் ஆர்ப்பாட்டம் முடிந்துவிடுகிறது. அதற்கு முன்னால் இருந்த விவகாரம், அதற்கும் முன்னால் இருந்த மூல விவகாரம் எல்லாம் மறக்கடிக்கப்படுகிறது.
எங்கு,
எப்போ, எப்படி யாருக்குனுங்கிறது தான் விடைகாணா புதிர்..இப்படி நமக்கெதிராக *புதுப்புது பிரச்சினைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றனர்.* *முடிவில் பன்றிமய கோட்பாட்டை அவிழ்த்து விடுகின்றனர்.* *பின்னர் நாம் அதிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக முதன்மைப் பிரச்சினைகளை நாமே மறந்து விடுகின்றோம்.*
*மறக்க வைக்கப்படுகிறோம்.*
இது மறுக்க முடியாத யதார்த்தம் .
No comments:
Post a Comment