Saturday, September 18, 2021

நிவேதனத்தை கடவுளுக்கு ஏன் படைக்கிறோம்?*

 நிவேதனம் என்றால் நாம் இலையில் படைக்கும் உணவை கடவுளை சாப்பிட வைத்தல் என்று அர்த்தம் அல்ல . எனக்கு இந்த உணவை உண்ணத்தந்து உயிர் காத்த உனக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறுவதே நிவேதனமாகும்.

பண்டிகைகள், விரதம் வந்தால் பலகாரங்களை சுவாமியின் முன் படைக்கிறோம். பொங்கல் வந்தால் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்கிறோம். கிருஷ்ணஜெயந்தி வந்தால் சீடை, முறுக்கு என வைக்கிறோம். இதையெல்லாம் பார்க்கும் சிலர் கேலியாக, கடவுளா சாப்பிடு போகிறார் என்றும் கடவுளின் பெயரை சொல்லி நீங்கள்தான் சாப்புடுகிறீர்கள் என்றும் கூறுவார்கள்... இவ்வாறு கேலி செய்பவர்களிடம் சற்றும் கோபப்பட நமக்கு உரிமையில்லை. ஏனெனில், அவர்கள் உண்மையைத் தான் சொல்கிறார்கள்.
நிவேதனம் என்பதன் பொருளை அறியாமல் அவர்கள் பேசினாலும் நிஜம் அது தான். நிவேதனம் என்றால் சுவாமியை சாப்பிட வைத்தல் என்பது பொருள் அல்ல. அறிவித்தல் என்று அர்த்தம். இறைவா இந்த சமயத்தில் எனக்கு இந்த உணவை உண்ணத்தந்து உயிர் காத்த உனக்கு மிக்க நன்றி தெரிவிக்கிறேன், என்று அறிவிப்பதே நிவேதனமாகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...