இந்திய விவசாயிகளின் குறிப்பாக தமிழக விவசாயிகளின் முக்கியமான வாழ்வாதாரமாக இருப்பவை எவை தெரியுமா?
அவை, ஹிந்து கோவில்கள் மட்டுமே -
ஆம், விவசாயிகள் மட்டுமல்ல பல வியாபாரிகளின் அடிப்படை ஆதாராமாக இருப்பவைகளும் ஹிந்து கோவில்கள்தான் -
ஆம், அதனால்தான் நமது முன்னோர்கள் எல்லாம் ஆயிரக்கணக்கான கோவில்களைக் கட்டினார்கள்-
இந்த பிரம்மாண்ட கோவில்கள்தான் அன்று ஒவ்வொரு ஊரில் பொருளாதார மண்டலங்களாக இருந்தன -
கோவில்கள்தான் பாடசாலைகளாகவும், உடற்பயிற்சி, சண்டைப் பயிற்சி கூடங்களாகவும், ஆதுரசாலை(மருத்துவமனை) களாகவும் இருந்தன -
அவசரகாலங்களிலும், பேரிடர் காலங்களிலும், போர்களின் பொழுதும் பொதுமக்களை காப்பாற்றும் அரண்களாகவும் திகழ்ந்தன -
ஆதலால்தான் கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று கூறினான் தமிழன் -
இன்று தமிழன் வேறு, ஹிந்துக்கள் தமிழர்கள் இல்லை என்று கூறும் கூற்று இரண்டாயிரம் வருட தமிழ்ச் சுவடிகளில் எங்கும் இல்லை-
அன்றைய சநாதன தர்மம்தான் இன்றைய ஹிந்துமதம் -
கொரோனா காலகட்டத்தில் பல மாதங்கள் கோவில்களைப் பூட்டி வைத்திருந்த பொழுது விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் புரிந்திருந்திருக்கும் -
ஆம், பழனியில் பல லட்சம் லிட்டர் பஞ்சாமிர்தம் மாதம்தோறும் விற்பனையாகிறது இதற்குத் தேவை சிறுமலைவாழை, நாட்டுச்சர்க்கரை, கற்கண்டு, பேரிச்சை, ஏலம், இவைகளெல்லாம் விவசாயப்பொருட்களே -
அது மட்டுமல்லாமல் சுவாமிக்கு பக்தர்கள் வாங்கிச்செல்லும் பூ, மாலை, வெற்றிலை, பாக்கு, தேங்காய் இவைகளும் விவசாயப் பொருட்களே -
மேற்கண்ட பஞ்சாமிர்தம் முதல் வெற்றிலைபாக்கு வரை விற்பவர்கள் வியாபாரிகள் இதில் ஹிந்துக்கள் மட்டும் இல்லை மாற்று மதத்தினர் கூட அதிக அளவில் பிழைப்பது ஹிந்து பக்தர்களை நம்பித்தான் -
ஆனால், ஹிந்துக்களையும், ஹிந்து கோவில்களையும் அழித்துவிடவேண்டும் என்று அதிகம் துடிப்பவர்களும் இந்த மாற்றுமத நண்பர்களே-
நீ சங்கி இப்படித்தான் பேசுவ அவங்கல்லாம் தாயா பிள்ளையா பழகறாங்க என்று நினைக்கும் நடுநிலைவாதிகளுக்கு ஒரே ஒரு கேள்வி-
1998 - பிப்ரவரி 14-கோவை குண்டு வெடிப்பன்று இவர்களில் ஒரே ஒருவர்கூட சாகவேண்டாம் 200 உடல் ஊணமுற்றோர் பட்டியலில் கூட இவர்கள் எவர் பெயருமே இல்லையே ஏன் என்று சிந்தித்துப் பார்த்தால் உங்களுக்கு உண்மை புரியும் -
சரி, அதைவிட்டுவிடுவோம், இவ்வாறு தமிழகத்தின் பொருளாதாரத்தின் தூண்களாக இருக்கக்கூடிய கோவில்களைக் காப்பாற்ற நாம் ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளோமா?-
தமிழகத்தில் அரசு செலவில் பிரம்மாண்ட கோவில் என்பது எனக்குத் தெரிந்து மருது சகோதரர்கள் கட்டிய காளையார் கோவிலாகத்தான் இருக்கும், அதைக்காக்க அந்த மன்னர்கள் தங்கள் உயிர்களையும் தியாகம் செய்தனர் என்பது வரலாறு -
அதற்குப் பிறகு இன்றுவரை ஹிந்து கோவில்கள் அழிவுகளை மட்டுமே சந்தித்து வருகின்றன -
ஆயிரக்கணக்கான சிலைகளைக் காணோம், லட்சம் ஏக்கர் நிலங்களைக் காணோம் -
குறிப்பாக திராவிட ஆட்சிகளுக்குப் பிறகு காணாமல் போன சொத்துக்கள் தான் அதிகம் -
ஆனால், சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்பு ஜோன்ஸ் பாதிரியான் போட்டுக்கொடுத்த திட்டத்தின்படி இங்கே பிராமண ஒழிப்பு திட்டமிடப்பட்டு இன்றுவரை நடந்துவருகிறது-
பிராமணர்களை ஒழித்தால் கோவில்கள் அழிந்துவிடும், சநாதன தர்மம் அழிந்துவிடும் நாம் நமது மதத்தைப் பரப்பிவிடலாம் என்று நம்பும் மிஷனரிகளின் சதிகளுக்கு அப்பாவி ஹிந்துக்கள் இரையாவதுதான் வேதனையானது -
ஆனால், பிராமணனை அழித்தால் கோவில்கள் அழிந்துவிடும், ஹிந்துமதம் சரிவைச் சந்திக்கும் என்பதெல்லாம் உண்மைதான், அவன் டேஷே போச்சு என்று அமெரிக்காவில் குடியேறி கூகுளின் தலைமைக்கு வந்துவிடுவான் -
ஆனால், இங்கே கோவில்கள் அழிந்தால் முதலில் அழிவது விவசாயி, அடுத்து வியாபாரி -
எந்த சர்ச்சிலும், பள்ளிவாசலிலும் விவசாயிகளுக்கோ, வியாபாரிகளுக்கோ லாபம் இல்லை -
மன்னர் காலத்தைப் போன்றே மீண்டும் பிரம்மாண்ட கோவில்கள் இங்கே எழுச்சியுற்றால்தான் தமிழன் மீண்டும் ராஜராஜன், ராஜேந்திரன் போன்று உலகை வெல்ல முடியும் -
பிரம்மாண்ட கோவில்களே பாடசாலைகளாகவும், இயற்கை மருத்துவமனைகளாகவும் மாறும் பொற்காலமே தமிழகத்தைக் காப்பாற்றும்_
No comments:
Post a Comment