*அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் பற்றிய நமக்கு ஏற்பட்ட சில புரிதல்*
இது ஏதோ கவுரவ அந்தஸ்துக்கான பதவி என மிக எளிதாக இந்த செய்தியை நம்மில் சிலர் கடந்து வந்திருப்போம்....!!
ஆனால்
ஒரு முதல்வரின் மகன், அதுவும் நிழல் முதல்வராக கோலோச்சும் அதிகாரத்தில் உள்ளவருக்கு இத்தனை சிறிய பொறுப்பு வழங்கபட்டதன் நோக்கம் என்ன என்று யாராவது யோசித்ததுண்டா..?? அப்படி என்னதான் இந்த பதவியில் உள்ளது...??
கட்சியில் எத்தனையோ சீனியர் இருக்க இவருக்கு ஏன் வழங்கப்பட வேண்டும் சற்று பார்ப்போமா...??
ஒரு பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் நூற்றுக்கணக்கான கல்லூரிகள் இவற்றின் நிர்வாகச் செயல்பாடுகளை அங்கீகரிப்பவை இரண்டு குழுக்கள்...!! ஒன்று ஆட்சிமன்றக்குழு, (சிண்டிகேட்) இன்னொன்று ஆட்சிப்பேரவை குழு, (செனட்) என்பார்கள், பாராளுமன்றத்தில் லோக்சபா, ராஜ்யசபா மாதிரிதான் இந்த இரண்டு குழுக்களும்...!!
நிர்வாகச் செயல்பாடுகள் உள்ளிட்ட மிக முக்கியமான முடிவுகளை ஆட்சி மன்ற குழு செயல்படுத்தும்
பல்கலைக்கழக பாடத்திட்டங்கள், பல்கலைக்கழக மேம்பாட்டு பணிகள் போன்றவற்றில் துணைவேந்தருக்கு ஆலோசனை கூறும் வேலையை செனட் செய்யும்...!
சிண்டிகேட் குழுவில் மூன்று விதமான உறுப்பினர்கள் இருப்பார்கள், பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட கல்லூரிகளின் முதல்வர்கள் பதவி வழியாக செனட் உறுப்பினராக பதவி வகிப்பார்கள், இரண்டாவது வகை உறுப்பினர்கள் எலக்டட் மெம்பர்ஸ், இவ்வகை உறுப்பினர்கள் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் ஒரு பேராசிரியர் மற்ற பேராசிரியர்களால் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்படுவார்..,
மூன்றாவது வகை உறுப்பினர்கள் முக்கியமானவர்கள் இவர்கள் நாமினேட்டட் மெம்பர்ஸ்,
ஒவ்வொரு பல்கலையிலும் சிண்டிகேட் கமிட்டியில், ஒன்று அல்லது இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர், சிண்டிகேட் பிரதிநிதியாக விரும்பும் எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகரிடம் விண்ணப்பம் வழங்க வேண்டும், அதில் யாருக்கு பதவி என்பதை சபாநாயகர் தேர்வு செய்து அறிவிப்பார்..!
அந்த தகவல் பல்கலை கழகங்களின் வேந்தரான கவர்னருக்கு அனுப்பப்படும், அதன்பின் சம்பந்தப்பட்ட உறுப்பினரின் நியமனம் குறித்து கவர்னர் உத்தரவு பிறப்பிப்பார்,
ஆளுநரின் நேரடி நியமனம் என்பதால் இந்த உறுப்பினர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் உண்டு...!!
இதன்படிதான் முதல்வர் ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி அண்ணா பல்கலை சிண்டிகேட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்...!!
சரி ஒரு பதவியின் முக்கியத்துவம் இந்த அளவு இருக்கும் போது அதிகாரம் மட்டும் குறைச்சலாவா இருக்கும்..?? ஆம், மிக அதிகம் தான் அப்படி என்ன அதிகாரம் என்கிறீர்களா..?ஒவ்வொரு மாதமும் சிண்டிகேட் கூட்டம் நடைபெறும்,அந்த கூட்டத்தில் பல்கலை நிர்வாகம், நிதி நிலைமை, பேராசிரியர், அலுவலர் நியமனம், பதவி உயர்வு, தேர்வு மற்றும் கல்வி கட்டணம் நிர்ணயம் போன்றவை குறித்து முடிவு செய்வது இந்த மூன்று உறுப்பினர்கள் தான், இதில் என்ன அதிகாரம் உள்ளது என்று யோசிக்கிறீர்களா..?? இங்கேதான் விஷயமே உள்ளது..!!
அண்ணா பல்கலைக்கழகம் என்பது ஒரு தனிப்பட்ட நிர்வாகம் அல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது., இவற்றுள் ஆறு அரசு பொறியியல் கல்லூரிகளும் மூன்று அரசு உதவி பெறும் தனியார் பொறியியல் கல்லூரிகளும் 225 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்...!!
பெரும்பாலான தனியார் பொறியியல் கல்லூரிகளின் முதலாளிகளிகள் திமுக பெருந்தலைகள் அவற்றின் கல்வி கட்டண நிர்ணயம், நிர்வாகம், நிதி நிலைமை, பேராசிரியர், அலுவலர் நியமனம், பதவி உயர்வு, போன்றவற்றை முடிவு செய்வது முதல்வரின் மகன்... மற்ற இரண்டு உறுப்பினர்களும் நிச்சயம் டம்மி பீசுகளாவே இருப்பர் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை..!!
இனி பொறியியல் படித்தவர்கள்
எட்டாம் வகுப்பு முதல் கணக்கு பாடம் நடத்தலாம் என்ற அறிவிப்பை இதனுடன் பொருத்தி கொள்ளுங்கள்...,
கூட்டி கழிச்சி பாருங்க, கணக்கு சரியா வரும்.ஆக இனி பொறியியல் கல்லூரி முதலாளிகள் காட்டில் மழைதான்..!! கட்சியின் ஜூனியருக்கு இதை விட அதிகாரம் மிக்க ஒரு அமைச்சர் பதவி தேவையா சொல்லுங்கள்...!!
No comments:
Post a Comment