சொத்துக் குவிப்பு வழக்கில் வசமாகச்
சிக்கிக் கொண்ட திமுக எம்பிக்களால்
மோடியை எதிர்க்க முடியுமா?
--------------------------------------------------------------
திமுக எம்பி மாண்புமிகு ஜகத் ரட்சகன்
அவர்களின் பல்லாயிரம் கோடி ரூபாய்
சொத்துக்களை ஏற்கனவே முடக்கியது
அமலாக்கத் துறை.
தமிழ் ஊடகங்கள் இந்தச் செய்தியை
இருட்டடிப்புச் செய்தன.
தற்போது இன்னொரு திமுக எம்பி
அமலாக்கத்துறையின் இரும்புப் இடியில்
சிக்கி உள்ளார்.
வெளிநாட்டில் சொத்து வாங்கிக்
குவித்துள்ளார் இந்த எம்பி. இவர் பெயர்
கவுதம் சிகாமணி.
இவர் திமுக அமைச்சர் பொன்முடியின்
மகன் ஆவார்.
கவுதம் சிகாமணியின்
பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை
அமலாக்கப் பிரிவு முடக்கி உள்ளது.
இதுபோன்ற மோசடி வழக்குகளில் சிக்கிய
பல கயவர்களை அமலாக்கப் பிரிவு திகார்
சிறையில் அடைத்துள்ளது.
இன்னொரு திமுக எம்பி கடலூர் ரமேஷ்
கொலை வழக்கில் சிக்கி சிறையில் கம்பி
எண்ணிக் கொண்டிருக்கிறார்.
பொன்முடி அவர்களே,
உங்கள் மகன் அமலாக்கப்பிரிவு வழக்கில்
சிக்கி உள்ளாரே!
தார்மீக அடிப்படையில்
நீங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா
செய்வீர்களா?
மடியில் இவ்வளவு கனம் உள்ளவர்களால்
எப்படி பாஜகவை எதிர்க்க முடியும்?
எப்படி மோடியை எதிர்க்க முடியும்?
---------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment