வீதிக்கு நான்கு மதுபானக்கடைகள்.
ஊருக்கு ஒதுக்குப்புறம் இருக்கவேண்டிய சாராயக்கடைகள், ஊருக்குள்ளே.
முச்சந்திக்கு ஒரு மருத்துவர்.
அதனை சுற்று வரிசைகட்டி மருந்துகடைகள்.
புற்றீசல் போல பிரியாணி கடைகள்.
நல்லிரவுவரை பரோட்டாகடைகள்.
வீதியெங்கும் பானிபூரி ஸ்டால்கள்
அனைத்திலும், கலப்பபடமாய் ரோஸ் பவுடர், அஜினமோட்டோ அல்லது அப்பல சோடாப்பு.
போதாதற்கு வீடுதோறும் இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகள்.
குழந்தைகளின் நாவை கெடுக்கும், துரித உணவுகள்.
எதிர்கால இந்த தேசம், ஐரோப்பிய நாடுகளை போல, குழந்தை பெற்றுக்கொள்ளும் முறையைவிட, குழந்தையே பிறக்கா சூழ்நிலையை நோக்கி, நாகரிக சமூகம் பயணிக்குறது.
வாகனங்கள் வாங்க கடன் கிடைத்த காலம்போயி, குழந்தை பெற்றுக்கொள்ள கடன் வாங்கி,
Test Tube Baby- EMI
கட்டவேண்டிய காலம் வந்துவிட்டது.
முன்னர் மண்ணை மலடாக்க
உயிர்கொல்லி உரங்கள் வந்தது.
இன்று மனிதனை மலடாக்க
மேற்கண்ட அனைத்தும் வரிசைகட்டி நிற்கின்றன.
விழிப்போர் பிழைப்பர்.
விழியாதோர் மாட்டிக்கொள்வர்,
மாய வலையில்.
No comments:
Post a Comment