சமீபத்தில் ஒரு பிரபல முகநூல் எழுத்தாளர் தனது பதிவில் தேவர் சமாதி என குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.. அந்த முகநூல் எழுத்தாளர் சற்று விசயம் தெரிந்தவர் அல்லது பதிவை எழுதி கொடுத்தவர் கொடுத்ததை கவனிக்காமல் பதிவிட்டாரா என தெரியவில்லை..
குரு பூஜை: பிறந்த தேதியில் இறந்தவர்களுக்கு மட்டுமே குரு பூஜை நடத்துவது வழக்கம்.. அவர்கள் பூத உடல் அடக்கம் செய்யபட்ட இடத்தை சித்தர் பீடம் என சொல்வார்கள். பிரம்மச்சாரியாக இருந்து மறைந்த சித்தர் பீடத்திற்கு சக்தி அதிகம்.
பிறந்த நாள் தியதி வரும் நாளில் இறப்பு கிடைப்பது கோடியில் ஒருவருக்கு மட்டுமே கிடைக்கும் பாக்கியம்.. அப்படியான தினத்தில் இருப்பவரை சவப்பெட்டியில் படுத்த நிலையில் அடக்கம் செய்ய மாட்டார்கள்.. இருப்புக்குழி எனப்படும் 4 × 6 அளவில் தோண்டி அமர்ந்த நிலையில் அடக்கம் செய்வார்கள்..இவ்வகையான இருப்புக்குழி சடங்கு சாங்கியங்களை செய்ய ஆன்மீக பெரியவர்களால் மட்டுமே முடியும். தேவர் மறைந்த பின் இறுதி காரியங்களை செய்த போது தேவரின் தலை கவிழ்ந்து இருந்ததாம். இறுதி காரியங்களை செய்த பெரியவர் கம்பீரமாக தலை நிமிர்ந்து இரும் தேவரே என கன்னத்தில் தட்டி நிமிர்த்து வைத்த பின் தேவரின் தலை கவிழவே இல்லையாம்.. தேவர் மறைந்த போது அவர் வளர்த்த மயில்கள் அத்தனையும் அவரோடு இறந்து போனதும் யதேச்சையான நிகழ்வுகள் அல்ல..
தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாக கொண்டு வாழ்ந்த மகான்..
மதுரை மீனாட்சியம்மனை இழிவாக பேசிய பானுமதியின் கள்ளக்காதலன் தேவர் இருக்கும் வரை மதுரை பக்கம் வராமல் இருந்தது தேவர் பெருமகனின் கம்பீரத்திற்கு சாட்சி..
தனது ஜமீன் ஆளுமைக்கு உட்பட்ட இருநூறுக்கு மேற்பட்ட கிராமங்களை தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு இலவசமாக வழங்கிய தேவரின் கருணையை ஜாதிய தலைவராக உருவகபடுத்தியது தான் தமிழகத்தின் நச்சு அரசியல்.
உங்களுடைய கம்பீரமான முறுக்கு மீசை தனி அழகு.. அதற்காகவே உங்களை காதலிக்க தோன்றுகிறது என தன்னை பார்க்க வந்த மக்கள் கூட்டத்தில் பெண் ஒருத்தி வேடிக்கையாக சொன்னதற்காக .. தனது மீசையால் ஒரு பெண்ணின் மனம் சலனபட்டதற்காக வாழ் நாள் முழுவதும் மீசை வைக்காமல் வாழ்ந்த கண்ணியமான பிரம்மச்சாரிய வாழ்க்கை வாழ்ந்த மகான்.. மனைவி, துணைவி, இணைவி என வாழ்ந்த திராவிட தலைவர்களை போற்றி புகழும் நிகழ் சூழ்ச்சி அரசியலில் தேவர் நிஜமாகவே தெய்வீக பிறவி தான்..
நாட்டின் விடுதலைக்கும் நாட்டின் நலனுக்கும் இறையாண்மைக்கும் பாடுபட்ட மண்ணின் மைந்தர்களான காமராஜரை நாடார் ஜாதி தலைவராகவும், பசும்பொன் முத்துராமலிங்கனாரை தேவர் ஜாதி தலைவராகவும் இரட்டை மலை சீனிவாசனாரை பறையர் ஜாதிய தலைவராகவும் கப்பலோட்டிய தமிழன் சிதம்பரனாரை பிள்ளைமார் ஜாதிய தலைவராகவும் தீரன் சின்ன மலையை கவுண்டர் ஜாதிய தலைவராகவும் பாட்டிற்கொரு பாரதியை பிராமண ஜாதிய தலைவராகவும் சித்தரித்து ஒவ்வொரு ஜாதிக்கும் ஜாதிய வன்மத்தை மூட்டி தங்களுக்குள்ளாகவே அடித்து கொள்ள வைத்து பிரித்தாளும் போலி அரசியலை மக்கள் தேவர் ஜெயந்தி எனும் இந்நன்னாளில் மக்கள் உணரட்டும். ஜெய்ஹிந்த் ..
No comments:
Post a Comment