Friday, October 29, 2021

நன்மாறன்_காலமானார் ..

 கடந்த 2001, 2006 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் மதுரை கிழக்குத் தொகுதியில் சி.பி.எம் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு நன்மாறன் வெற்றி பெற்றார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் நன்மதிப்பையும் பெற்றவராகவும் ..
மிக நேர்மையான, எளிமையான அரசியல்வாதி என்ற பெயரையும் பெற்றவர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கத்தின் மாநில நிர்வாகியாகவும் பாடுபட்டவர்.
`மேடைக் கலைவாணர்' என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டு வந்த நன்மாறன், ..
மதுரை மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக உழைத்தவர்.
இறுதிக்காலம் வரையில் வாடகை வீட்டிலேயே வசித்து வந்த நன்மாறன்,
அண்மையில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு கேட்டு விண்ணப்பித்த தகவலும் வெளியானது.
`இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்கூட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்தே இருக்கும்' ..
``எளிமை, நேர்மை, அர்ப்பணிப்பு , மக்கள் நேசம் ஆகிய பண்புகளை `நன்மாறன்' என்ற ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம்.
அவரது இயற்பெயர் ராமலிங்கமாக இருந்தாலும் மக்களும் மதுரையும் இயக்கமும் தந்த பெயர்தான் நன்மாறன்"
ஒரே ஒரு அறை, அதன் ஓரம் சீலை மறைக்கப்பட்டு சமையலறையாக இருக்கும். ..
அங்கு கட்டில் ஒன்று ஓரத்தில் கிடக்கும்.
தவம் என்பது துறவிகளுக்கான வார்த்தை என்றாலும் எந்த துறவிகள் இப்படி இருக்கிறார்கள்?
உலகமயம், நுகர்வியம், பணபல அரசியல் ஆகியவற்றுக்கு மத்தியில் இப்படி வாழ்ந்ததைவிட பெரிய தவம் என்ன இருக்க முடியும்?" .
நன்மாறன்
"எல்லிஸ் நகர் கட்சி அலுவலகத்தில் கூட்டங்கள் முடிந்தவுடன் யாராவது ஒரு தோழரின் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பார்.
கட்சி கொடுத்த டி.வி.எஸ் 50 வாகனத்திலேயே மதுரை மாநகரின் சித்திரை, ஆவணி மூல வீதிகளில் அவர் வலம் வந்தார்.
எல்லோருக்கும் நல்லவராக அவர் இருந்தார். .
மீனாட்சி அம்மன் கோவில் ஆடி வீதிகளின் சொற்பொழிவுகளில் அவர் அமர்ந்திருப்பார்.
மதுரை தெருக்களின் வரலாற்றை சுவையாகச் சொல்வார்.
அவர் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து மாரியம்மன் தெப்பக்குளத்தில் அங்கப் பிரதட்சணம் செய்ய பாதையமைத்துக் கொடுத்தார்.
கம்யூனிஸ்டுகள் கடவுள் வழிபாட்டை ஊக்குவிக்கலாமா? என்ற விமர்சனம் வந்தபோது,
`உருள்பவர் எங்கள் உழைப்பாளி தோழர் அல்லவா? கல்லும் மண்ணும் குத்தாமல் உருளட்டுமே' என நெகிழவைத்தார்.
வறட்டுத்தனம் என்பதே அவரிடம் கிடையாது.
ஆனால் தத்துவ விசாரங்களில் சமரசம் செய்ய மாட்டார். மக்கள் பிரச்சினைகளில் முன் நிற்பார்"
குன்றக்குடி பெரிய அடிகளார், தமிழருவி மணியன், மாயாண்டி பாரதி, விடுதலை விரும்பி என பெரும் ஆளுமைகள் மத்தியில் ஒரே மேடையில் பேச நன்மாறன் எழுந்தால் கூட்டம் ஆரவாரிக்கும்.
பட்டிமன்றத்தின் போக்கை அவர் பேச்சு மாற்றிவிடும்.
இரவு 2 மணியைக் கடந்தும் ஆயிரக்கணக்கில் மக்கள் உட்கார்ந்திருப்பார்கள்.
நன்மாறனின் பயணம் நீண்டது, நெடியது.
வாலிபர் சங்க தலைவராக, இலக்கிய உரை வீச்சாளராக, மார்க்சிஸ்ட் தலைவராக,
மக்கள் பிரதிநிதியாக பன்முகப் பரிமாணத்தில் சிறந்த பங்களிப்பை நல்கியவர்.
அவர் மதுரையின் அடையாளமாகவும் கம்யூனிச பண்புகளின் அடையாளமாகவும்
அரசியல் விழுமியங்களின் அடையாளமாகவும் இருந்தவர்"
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...