ரோல்ஸ் ராய்ஸ் காரில் போயிட்டு வியர்வை வருவதற்குள் கேரவனுக்குள் போய் உட்கார்ந்துகொண்டு நீங்கள் படுவதெல்லாம் கஷ்டம் என்றால் ...
சாப்பாடு, குடும்ப வாழ்க்கை, எதிர்கால வாழ்க்கை ஒவ்வொன்றையும் மனதில் வைத்துக்கொண்டு நிம்மதியில்லாமல் மற்றவர்கள் படும் கஷ்டம் எல்லாம் ....
உங்களது அம்மா ஒரு பேட்டியில் சொல்கிறார்கள் ...இந்தியாவில் எந்தவிதமான புதுவிதமான கார்கள் வந்தாலும் உடனடியாக வாங்கி எங்களது கரேஜில் நிறுத்தி விடுவார் விஜய் என்று..
நீங்கள் கஷ்டப் பட்டு சம்பாதிக்கிறேன் என்று சொல்கிறீர்கள் ????
நடிப்பதை எல்லாம் படத்தோடு மட்டும் வைத்துக் கொள்ளுங்கள் ...
டாக்டர் பிடித்த ஒருவரை ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கலாமே என்று கேட்க ஒரு நடிகருக்கு உரிமை இருக்கும் பொழுது, 80 முதல் 100 கோடி சம்பளம் வாங்கும் ஒரு நடிகரை , அதுவும் நுழைவு வரி கட்டாமல் ஒன்பது வருடங்களாக ஏமாற்றி வரும் ஒருவரை விமர்சிக்க நீதிபதிக்கு உரிமை இல்லையா .....
என்னைப் பொருத்தவரை நுழைவு வரிக்கு விலக்கு கேட்டதற்கு தண்டனை கொடுத்திருக்க வேண்டும்...
ரொம்ப மனது புண்பட்டிருந்தால் இப்பொழுதே நடிப்பதை விட்டு விட்டு வாருங்கள் மூட்டை தூக்கி வியர்வை கொட்ட கொட்ட கஷ்டப்பட்டு சம்பாதிக்கலாம் ...
பக்கத்து வீட்டில ஆடை, வெடி எல்லாம் வாங்கிட்டாங்க, நமக்கு எங்கே அப்பா என்று மகனோ மகளோ கேட்கும்போது,
யாராவது கடன் ஆவது கொடுக்க மாட்டார்களா என்று ஏங்கும் அப்பாவின் மனநிலை எப்படி இருக்கும் தெரியுமா???
அவருடன் கேட்டுப்பார் கஷ்டம் என்றால் என்னவென்று ...
அவர் படும் கஷ்டத்தை விட நீங்கள் கஷ்டப்படுகிறீர்களா???
No comments:
Post a Comment