*சென்னை நகரத்தில் கடந்த 50 வருடங்களாக வாழ்ந்துவரும் நடுநிலையாளர் ஒருவரின் வாட்ஸாப் இது.*
*கடந்த 1970 இல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.3.12 +ஆயில் 13 பைசா சேர்த்து ரூ.3.25. தற்போதய விலை ரூ.100/- கிட்டத்தட்ட 30 மடங்கு அதிகம்.*
*அன்று டீ விலை 20 பைசா, இன்று ரூ.10/- இது 50 மடங்கு அதிகம்,*
*அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஒரு மாதத்திற்கான கட்டணம் ரூ 5.70 இன்று ரூ 240/- இது 42 மடங்கு அதிகம்,*
*அன்று வெஜ் மீல்ஸ் ரூ.3 இன்று ரூ.120/- இது 40 மடங்கு அதிகம்,*
*அன்று சினிமா டிக்கெட் ரூ.2.50, இன்று ரூ.120/- இது 48 மடங்கு அதிகம்,*
*அன்று மினிமம் பஸ் கட்டணம் 10 பைசா, இன்று ரூ.4/- இது 40 மடங்கு அதிகம்,*
*அன்று சிறிய கூடை பூ 25 பைசா, இன்று அது ரூ.25/- இது 80 மடங்கு அதிகம்,*
*அன்று தங்கம் ஒரு கிராம் ரூ.30, இன்று அது ரூ.4500/- இது 150 மடங்கு அதிகம்,*
*அன்று மத்திய அரசு ஊழியரின் சம்பளம் ரூ.250/- இன்று அது ரூ.25,000/- இது 100 மடங்கு அதிகம்,*
*அன்று சென்னை பெசன்ட் நகரில் ஒரு பிளாட் விலை ரூ.30,000/- மட்டுமே. ஆனால் அதே பிளாட் இன்றைய விலை ரூ.1.5 கோடி. இது கிட்டத்தட்ட 500 மடங்கு அதிகம்.*
*இதையெல்லாம்பற்றி எவரும் பேசாமல்,பெட்ரோல் விலை பற்றி மட்டும் தற்போது விவாதம் செய்வது ஏன்?*
No comments:
Post a Comment