திமுக ஆட்சிக்கு வந்து 5 மாதங்களில் 8 அமைச்சர்கள் இது வரை 24 முறை டெல்லிக்கு பயணம் செய்திருக்கிறார்கள் !.. அதிமுக ஆட்சியில் மொத்தமாக கூட இவ்வளவு முறை சென்றதில்லை!..
அப்படி என்ன திட்டம் கேட்டு மத்திய அரசிடம் இருந்து வாங்கிட்டு வந்தாங்க தமிழகத்துக்கு?..
இந்த நிலைமையில் இருந்தா,ஆளுநர் துறை ரீதியாக செயலாளர்களை தன்னை வந்து சந்தித்து அரசின் திட்டங்களின் நிலை பற்றி விளக்கமளிக்கனும் சொன்னா, இவர்கள் முடியாதுன்னு எப்படி சொல்வார்கள்!?..
அதிமுக ஆட்சியிலாவது ஆளுநர் சில இடங்களுக்கு சுற்றுப்பயணம் தான் போனார்.. ஆனால் இங்க இவர்கள் எல்லாத்தையும் தூக்கிக்கிட்டு அவரை தேடி போகிறார்கள்..
இதுதான் கொத்தடிமைதனம் என்பது!.
இத்தனைக்கும் இவர்கள் வெளிப்படையாக பிஜேபி கூட்டணியில் இருப்பவர்களாய் இருந்தால் கூட போய் தொலையுதுன்னு விடலாம்.. ஆனா இவர்கள் செயல்பாடுகள் எல்லாம் பார்த்தா ஏதோ கொள்ளைப்புற கூட்டணி அமைச்ச மாதிரி தான் தெரியுது !..
No comments:
Post a Comment