துளசிச் செடியின் சின்ன சிறிய மரத் துண்டுகளை வைத்து தயாரிக்கப்படுவதே உண்மையான துளசி மாலை ஆகும்.
இந்த மாலையை நாம் அணிந்து கொண்டால் வெற்றி நம்மை தேடி வரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதோடு மட்டுமல்லாமல் இயற்கையாகவே இந்த துளசிமாலையானது நம்முடைய உடலின் குளிர்ச்சியையும், சூட்டையும் சம நிலையில் வைத்திருக்கும்.
கடையில் இருந்து புதியதாக வாங்கி வரப்பட்ட துளசி மாலையாக இருந்தால், அதை அப்படியே கழுத்தில் அணிந்து கொள்ளக் கூடாது. முதலில் மஞ்சள் தண்ணீரில் அதை நன்றாக ஊற வைக்கவேண்டும்.
மஞ்சளை தண்ணீரில் நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு துளசி மாலையை, இரண்டு மணிநேரம் அந்த மஞ்சள் தண்ணீரில் ஊறவைத்து, அதன் பின்பு நல்ல தண்ணீரில் போட்டு கழுவி, அதன் பின்பு உங்கள் வீட்டு பூஜை அறையில் பெருமாள் படத்திற்கு அல்லது மகாலட்சுமி படத்திற்கு சாத்திவிட்டு இறைவனை நன்றாக வேண்டிக் கொண்டு அதன் பின்பு துளசி மாலையை கழுத்தில் அணிந்து கொள்வதுதான் சரியான முறை.
சிலர் இந்த மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளாமல் ஜபம் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். அல்லது மந்திரத்தை உச்சரிக்க கணக்கு வைத்துக் கொள்வதற்காகவும் பயன்படுத்துவார்கள்.
கழுத்தில் அணிந்து கொள்வதற்காக வாங்கினாலும் சரி. ஜெபம் செய்வதற்காக வாங்கினாலும் சரி. மேற்குறிப்பிட்ட முறையை செயல்முறை படுத்திய பின்புதான் துளசி மாலையை பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும்.
ஜபத்திற்காக எந்த ஒரு மாலையை பயன்படுத்தினாலும், நாம் ஜெபம் செய்யும்போது நம் கையில் அந்த மாலையை உருட்டும் போது, அது அடுத்தவர்களுடைய கண்ணிற்கு கட்டாயம் தெரியக்கூடாது.
பெண்களாக இருந்தால், தங்களுடைய முந்தானையில் ஜெபமணி மாலையை மறைத்துக்கொள்ள வேண்டும். ஆண்களாக இருந்தால் தங்களுடைய அங்கவஸ்திரத்தை கொண்டு மறைத்துக் கொண்டுதான் ஜெப மாலையை உருட்ட வேண்டும் என்பது சாஸ்திரம்.
No comments:
Post a Comment