Sunday, October 24, 2021

கௌரமாக கவரில் பிச்சை வாங்கும் பிச்சை காரனுக்கு பெயர் மீடியா!

 

🐶
ஆப்கனில் இருந்து தப்பி இந்தியாவிற்கு வந்த அகதிகள், டில்லியில் போராட்டம்
- செய்தி.
எதற்காக இந்த போராட்டம்?
இந்த மண்ணில் அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது போராட?
பாகிஸ்தானில் போய் இப்படி போராட முடியுமா?
அல்லது மலேசியா சிங்கப்பூரில் போய் தான் இப்படி போராட முடியுமா?
தங்கள் நாட்டில் இருந்தால் உயிருடன் கூட இருக்க மாட்டோம் என்று பயந்து தப்பி வந்த கூட்டம், இந்தியா வந்ததும் ஜனநாயகம் பேசத் துவங்குகிறது. அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் வேண்டும் என்கிறது, குடியுரிமை வேண்டும் என்கிறது, நீண்ட கால விசா கொடுக்க வேண்டும் என்கிறது. இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது இப்படி கேட்க?
எந்த நம்பிக்கையில் இவர்கள் போராடுகிறார்கள்?
அவர்களுக்கு இருப்பது ஒரே நம்பிக்கை - இந்தியாவின் கேடுகெட்ட அரசியல்வாதிகள், ஓட்டுப்பொறுக்கிகள்!
அட, வேலை கொடு, பாதுகாப்பு கொடு என்று கேட்பதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம், இந்தியா இஸ்லாமோஃபோபியாவை கட்டுப்படுத்த வேண்டுமாம் - எப்பேர்பட்ட கோரிக்கை!!
இங்கு நாம் கவனிக்க வேண்டியது, இந்த போராட்டக்காரர்கள் அவர்கள் நாட்டில் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் அல்ல!
ஆப்கனில் சிறுபான்மையினர் கணக்கை எடுத்துக்கொண்டால், 1970களின் தொடக்கத்தில் பல லட்சக்கணக்கானோர் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் என இருந்திருக்கிறார்கள் என்று ஐநாவின் ஒரு அறிக்கை சொல்கிறது. இப்போது அங்கிருக்கும் சிறுபான்மையர் சில நூறு பேர் மட்டுமே!
தங்கள் சொந்த மண்ணில் சில லட்சம் சிறுபான்மையினரை காப்பாற்ற வக்கில்லாத, தானே உயிர் வாழ முடியாத சூழலில் இந்தியாவிற்கு ஓடிவந்து இங்கே இவ்வாறெல்லாம் போராட முடிகிறது என்றால் அவர்களின் நம்பிக்கை இந்தியாவின் ஓட்டுப் பொறுக்கும் கேடுகெட்ட, கேவலமான அரசியல்வாதிகள் தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.
தற்போது மீண்டும் ஆப்கனில் இருந்து இந்தியா அகதிகளை அழைத்துக் கொண்டு வருகிறது, இதில் அனைத்து மதத்தினரும் அடக்கம். பாவப்பட்டுக் கூட்டி வந்தால் இங்கே வந்து அடிமடியில் கை வைக்கிறார்கள் அகதிகளாக வருபவர்கள்.
உலகின் விஷ்வ குரு, வசுதைவ குடும்பகம் என்றெல்லாம் உளறிக் கொட்டிக் கொண்டு வேலியில் போகும் ஓணான்களை எடுத்து மடியில் வைத்துக் கொள்கிறது இந்தியா.
இந்திய அரசியல்வாதிகளுக்கு ஒரு மைக்ரான் அளவிலும் இந்திய மக்கள் மீது அக்கறை இருப்பின் ஆப்கனில் இருந்து வரும் எந்த ஒரு அகதிக்கும் குடியுரிமை கொடுக்கக்கூடாது. வேண்டுமானால் refugee campகளில் வைத்து அவர்கள் இயற்கை மரணம் அடையும் வரை சோறு போட்டுத் தொலையட்டும். இருக்கவே இருக்கிறார்கள் ஆயிரக் கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் வருமான வரி கட்ட கூடிய 3% இந்தியர்கள். வருமான வரி கட்டும் 100 பேரில் 99 பேர் உண்மையாக உழைத்து சம்பாதிப்பவர்கள், தானம் செய்வதாக அவர்கள் நினைத்துக் கொள்ளட்டும்!
இந்திய அரசியல்வாதிகளுக்கு அதே ஒரு மைக்ரான் அளவுக்கேனும் மனத்துணிவு இருந்தால், மேற்கத்திய நாடுகளுக்கு நடுவிரலைக் காட்டி, 57 இஸ்லாமிய நாடுகளுக்கு ஆப்கனில் இருந்து வரும் அகதிகளை பிரித்து அனுப்ப வேண்டும். அதற்கு வக்கற்ற அரசியல்வாதிகள் இந்தியக் குடியுரிமை கொடுக்கிறேன் என்று இந்த மண்ணை பாழ்படுத்தக் கூடாது, அகதிகள் எந்த ஜாதி, மதம், இனம், மொழியாக இருந்தாலும் சரி!
இந்த மண்ணின் வளங்கள் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே.
ஏற்கனவே ரோஹிங்யாக்கள் முதல் இலங்கை அகதிகள் வரை இங்கே இருப்பது பல லட்சக்கணக்கானோர்!
அதைவிட முக்கியமாக, உள்நாட்டு அகதிகளாகத் திரியும் காஷ்மீரப் பண்டிட்டுகளையே முழுமையாக, அடிப்படை வசதிகளுடன் குடியமர்த்த மனம் இல்லாத அரசியல்வாதிகள், வெளிநாட்டுக்கு அகதிகளுக்கு உதவி செய்ய எத்தனிப்பது அக்கிரமத்திலும் அக்கிரமம்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...