ஒவ்வொரு குடும்பத்திற்கும் TV இன்றியமையாதது .TV பார்க்கனும்னா கேபிள் கனெக்ஷன் அல்லது நெட் கனெக்ஷன் அவசியம் வேணும்.
மாநில அரசு பலவிதமான இலவச பொருள்களைக் கொடுக்கின்றது .
குறைந்த கட்டணத்தில் தமிழ் நாடு அரசு கேபிள் TV இணைப்பு வழங்கிட வழிகாட்டுதல்களையும் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் அரசு அறிவித்தது .எத்தனை பேர் இதனால் பயன் பெற்றார்கள் என்பதெல்லாம் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டால் தெரிய வரும்..
தற்போதுள்ள நிலையில் தனியார் செட் ஆப் பாக்ஸ்தான் அதிக அளவில் வழங்கப்பட்டு வருகின்றது .அவைகள் தரமானதாக உள்ளதா என்பது அதனைப் பயன் படுத்துவோரே உணர்வர்.
கேபிள் இணைப்பு கொடுப்பதால் தெருவெங்கும் கேபிள் இணைப்பு ஒயர்கள் வீடுகளின் மேலும் - மின் கம்பங்களிலும் கட்டப்பட்டு வருகின்றது.மின் கம்பங்களில் கட்டப்படுவது உடமைக்கும் உயிருக்கும் ஆபத்து என்பதை உணர்வார் இல்லை.. கேபிள் இணைப்பு இல்லாதவர்களின் வீடுகளில் கூட சில சமயங்களில் அத்துமீறி கேபிள் ஒயர்கள் கொண்டு செல்லப்படுவதும் உண்டு ,
ஏன் இந்த நிலை - இந்த நிலையை மாற்ற அரசு முன் வரலாமே .
ஒவ்வொரு வீட்டிற்கும் குடும்ப அட்டை - ஸ்மார்ட் அட்டை உண்டு - ஒரு குடியிருப்பிற்கு ஒரு டிஷ் வழங்கலாம் . இலவசமாக இல்லாவிட்டாலும் அரசின் சலுகை விலையில் - தவணை முறையில் கட்டணம் செலுத்த வழி வகை செய்யலாம். . மாதாந்திர கட்டணம் செலுத்திட. ATM கார்டு போன்ற அமைப்பில் அட்டையும் உண்டு .பணம் செலுத்தவில்லையெனில் தாமாக தொடர்பு துண்டிக்கப் பட்டுவிடும். மாதாமாதம் - காலாண்டு அரையாண்டு முழு ஆண்டு என சந்தா செலுத்தவும் வழிவகைகள் உண்டு பண்ணலாம்.
வழங்கப்படுகின்ற டிஷ் ஸில் அந்தந்த மாநில அரசின் பெயரைப் பதிவு செய்யலாம். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது மாநில அரசு தானே.
இதனால் ஒயர்கள் நகரமெங்கும் சாலைகள் - சந்துகளில் தொங்குவதும் - மின் கம்பங்களில் கட்டப் படுவதும் - தாழ்வாக ஒயர்கள் தொங்கி போக்குவரத்தில் மக்கள் மீதும் வாகனங்களின் மீதும் உரசும் நிலை இல்லாமலிருக்க வகை செய்யும்.
அதுமட்டுமல்ல , மாதாமாதம் அரசுக்கு நிரந்தர வருமானம் கிடைத்திட பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
மாநில அரசு இது குறித்து நல்ல முடிவை கடைப்பிடிக்க வேண்டுமென்பது பரவலாகப் பேசப் படுகின்ற ஒன்று..
No comments:
Post a Comment