Wednesday, October 20, 2021

ஆப்பரேசன் அதிமுக ஆரம்பம்-

 சசிகலா நேற்று தான் ஜெயலலிதா நி னைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்

இதோ இன்று எம்ஜிஆர் நினைவு இல்ல த்தில் அதிமுக கொடி ஏற்றி அதிமுக பொ து செயலாளர் சசிகலா என்று தன்னு டைய பெயர் பொறித்து கல்வெட்டு வைத்து விட்டார்..
ஆக அதிமுகவின் பொன்விழா ஆண்டில் ஆப்பரேசன் அதிமுக ஆரம்பமாகி விட்ட து என்றே நான் நினைக்கிறேன்
அடுத்த சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னம் இருந்தால் எடப்பாடி மட்டு
மல்ல யார் தலைமையிலும் அதிமுகவால் வெற்றி பெற முடியும்.இரட்டை இலை சி
ன்னம் இருக்கும் வரை திமுக தொடர்ந்து
ஆட்சியில் இருக்க முடியாது.இது தான்
தமிழகத்தில் உள்ள நிஜ அரசியலாகும்
1996 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா
வே தோற்று அதிமுக படு தோல்வி அடை ந்த நிலையில் இரண்டே வருடங்களில்
அதிமுக 1998 லோக்சபா தேர்தலில் வேறு
றி பெற்று திமுகவை நிலைகுலைய வை. த்தது அதோடு 2001 சட்டமன்ற தேர்தலில்
திமுகவை படு தோல்வி அடைய வைத்த து.
அதிமுக ஒரு மக்கள் கட்சி .இப்போதை க்கு அதிமுகவுக்கு உள்ள மைனஸ் தலை
மை அல்ல. மாறாக பிஜேபியுடன் உள்ள
கூட்டணி தான்.கடந்த சட்டமன்ற தேர்தலி ல் அதிமுக தோல்வியடைய முக்கிய கார ணம் பிஜேபி கூட்டணி தான்.
ஒரு வேளை அதிமுக கூட்டணியில் பிஜே
பி இல்லாது இருந்தால் திமுக கூட்டணி
யில் உள்ள பல கட்சிகள் அதிமுகவை நோக்கி சென்று இருக்கும். இல்லை என் றாலும் அதிமுகவை காட்டி மிரட்டி திமுக விடம் நிறைய தொகுதிகளை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பெற்று இருக்கும்
அந்த மாதிரி நிலைமை ஏற்பட்டு இருந் தால் மீண்டும் அதிமுகவே வெற்றி பெற்
று இருக்க முடியும். ஒரு வேளை திமுக
கூட்டணி வெற்றி பெற்று இருந்தாலும் தனி மெஜாரிட்டியுடன் திமுக ஆட்சி அ மைந்து இருக்காது.
எனவே இப்பொழுது உள்ள திமுக ஆட்சி
க்கு முக்கிய காரணம் பிஜேபி தான்.இ
தை யாராலும் மறுக்க முடியாது .எனவே
மறைமுகமாக திமுக பிஜேபிக்கு நன்றி
க்கடன்ப்பட்டிருக்கிறது.
அந்தக் நன்றிக்கடனை எப்படி செலுத்த
லாம்? ஒரே வழி அதிமுக உடைப்புத்தான்
அதிமுக உடைந்தால் அதனால் பலன் அ
டைய இருக்கப்போவது இரண்டே கட்சி கள் தான் ஒன்று திமுக அடுத்தது பிஜேபி
அதிமுக உடைந்தால் அதனால் முதலில்
பலன் அடைய இருப்பது திமுக. அதிமுக
உடைந்தால் அடுத்து வரும் 2024 லோக்
சபா தேர்தல் 2026 சட்டமன்ற தேர்தல் இர
ண்டிலும் திமுக எந்த ஒரு கூட்டணி இன் றியும் தனித்து நின்றே வெற்றி பெற முடி
யும்.
ஒரு வேளை இனி வருகின்ற காலங்க ளில் அதிமுக பிஜேபி இடையே உள்ள கூட்டணி உடையுமானால் இப்பொழுது திமுக கூட்டணியில் உள்ள பல கட்சிகள் அதிமுகவை நோக்கி சென்று விடும்
அப்பொழுது அதிமுக திமுகவை படு தோ
ல்வி அடைய வைத்து மறுபடியும் ஸ்ட்ரா
ங்காகி விடும். அடுத்த தேர்தலில் அதிமு க கூட்டணியில் உள்ள கட்சிகள் திமுகவு டன் சேர்ந்து திமுகவை ஆட்சிக்கு கொண் டு வந்து விடும்.
இது தான் தமிழக அரசியலில் இது வரை இருந்து வருகிறது.இதை மாற்றி நீண்ட
கால ஆட்சிக்கு திமுக ஆசைப்படுகிறது.
இந்த நிலை மாறினால் தான் பிஜேபி யால் தமிழகத்தில் தலையெடுக்க முடியு ம்
இதற்கு ஒரே வழி அதிமுக உடைய வேண் டும்.அப்பொழுது தான் திமுக கூட்டணி யில் உள்ள கட்சிகளை திமுக கழற்றி வி ட்டு தனித்து நின்று வெற்றி பெறும் சூழ் நிலை உருவாகும்.
திமுக தனித்து போட்டியிட்டு வெற்றி பெ
றும் நிலை உருவானால் திமுகவுடன் இது
வரை இருக்கும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட்
கட்சிகள் விடுதலை சிறுத்தைகள் முஸ்லி ம் லீக் போன்ற பிஜேபி எதிர்ப்பு சக்திகள்
அரசியல் ரீதியாக பலவீனமாகி விடும்.
சுமார் 50 ஆண்டு காலமாக திமுக அதிமு க என்று மாறி மாறி தமிழக அரசியல்
செல்வதற்கு காரணம் இந்த கட்சிகள் தா
ன் இந்த கட்சிகள் பலவீனமாகி விட்டாலே
போதும் பிஜேபியின் சித்தாந்த அரசியல்
தமிழக அரசியலில் கால் ஊன்ற வழி கி
டைத்து விடும்.
அதிமுக உடைந்து பலவீனமாகும் பொழு து உண்டாகும் மாற்று அரசியலை பிஜே
பியினால் தான் உருவாக்க முடியும் என்
கிற நிலைமை உருவாகி விடும். இதனா ல் திமுக எதிர்ப்பு சக்திகள் பிஜேபியை
நோக்கி வர முடியும் என்பதால் தமிழகத் தில் பிஜேபி படிப்படியாக வளர ஆரம்பிக்
கும்.
இதற்கு நேர்மாறாக அதிமுக அழிய ஆரம்
பிக்கும்.இதனால் அதிமுகவில் தேசிய
சிந்தனை கொண்டவர்கள் பிஜேபியை
நோக்கியும் திராவிட சிந்தனை கொண்ட வர்கள் திமுகவை நோக்கியும் செல்ல ஆ
ரம்பிப்பார்கள்.
எவ்வளவு விரைவில் அதிமுக அழிகிற தோ அவ்வளவு விரைவில் தமிழகத்தில்
பிஜேபி வளர்ந்து நிற்கும். ஆக அதிமுக
உடைப்பு என்பது திமுக மற்றும் பிஜேபி என இரண்டுகட்சிகளுக்கும் தேவைப்ப டுகிறது.திமுக தமிழகத்தில் ஆட்சியில் இருக்கிறது பிஜேபி மத்தியில் ஆட்சியில் இருக்கிறது
இரண்டு கட்சிகளுக்கும் தான் அதிமுக அழிவதால் மிகப்பெரிய அளவில் பலன்
கிடைக்கும் என்பதால் சசிகலா மூலமாக
ஆட்டத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள்
எடப்பாடி முதல்வராக இருந்த பொழுது
அவரின் கட்டுப்பாட்டில் இருந்த அதிமுக
இனி அவரின் கட்டுப்பாட்டில் இருக்க முடி
யாது.
ஆளும் கட்சி அரசியல் வேறு எதிர்கட்சி
அரசியல் வேறு .முதல்வராக இருந்து
கொண்டு யாராலும் கட்சியை தக்க வை த்து கொள்ள முடியும். ஆனால் எதிர் கட்சி
யாக இருந்து கொண்டு கட்சியை காப்பா
ற்ற மக்கள் செல்வாக்கு பெற்ற மிக சிற ந்த ஆளுமை கொண்ட கருணாநிதி மற் றும ஜெயலலிதா மாதிரியான தலைவர் களால் மட்டுமே முடியும்.
இதனால் சசிகலா மூலமாக அதிமுகவில்
உருவாக்கப்படும் எடப்பாடி எதிர்ப்பு அரசி
யல் மூலமாக அதிமுக இரண்டாக உடை
யும் நிலை நிச்சயமாக உருவாகும்..இர
ட்டை இலை சின்னம் முடங்கி விட்டாலே
போதும் திமுகவை இன்னும் 10 வருடத்தி
ற்கு அசைக்க முடியாது.
அந்த 10 வருடம் என்பது தமிழகத்தில் பி
ஜேபி திமுகவுக்கு மாற்றாக வளர எடுத்து கொள்ளும் காலமாக இருக்க முடியும் என்
பதால் ஆப்பரேசன் அதிமுகவை இரண்டு
கட்சிகளும் மறைமுகமாக இணைந்து
சசிகலா மூலமாக ஆரம்பித்து விட்டார்கள்
என்றே நினைக்கத்தோன்றுகிறது.
May be an image of text that says 'புரட்சித்தலைவர் ஆர் நினைவு இல்லம் தி.நகர், சென்னை- 17. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பொன்விழா ஆண்டு துவக்க நாள் கொடியேற்றியவர்: திருமதி. க.சசிகலா கழக பொதுச் செயலாளர் நாள் 17.10 2021'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...