தமிழகத்தில் பழைய வழக்குகளை தூசிதட்டி மாரிதாஸ் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபட்டு வருவதாக பாஜக குற்றம் சுமத்திவரும் நிலையில் தெலுங்கானா மாநிலத்தை போன்று புதிய முயற்சியில் இறங்க மாநில பாஜக முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கானாவில் எழுத்தாளர் மாரிதாஸ் போன்று யூ டியூப் மூலமாக சந்திரசேகரராவ் அரசின் குற்றங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பத்திரிக்கையாளர் டீன்மர் மல்லண்ணா இவர் மீது அதிருப்தி அடைந்த ஆளும் அரசு வரிசையாக பல வழக்குகளை போட்டுகைது செய்து கொண்டே இருந்தது. ஒன்றல்ல இரண்டல்ல 35 வழக்கு இதற்கு எதிராக தெலுங்கானா பாஜகவினர் பல போராட்டங்களை நடத்தியும் பலன் இல்லை என்கிற நிலை இருந்தபொழுது தெலுங்கானா மாநில பாஜக எம்பி அரவிந்த் தர்மபுரி டீன்மர் மல்லண்ணாவின் மனைவியை டெல்லிக்கு அழைத்து சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் டீன்மர் மல்லண்ணாவை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
இவற்றையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசிடம் எந்தெந்த பிரிவுகளில்என்ன காரணத்திற்காக டீன்மர் மல்லண்ணா கைது செய்யப்பட்டார் என்று அறிக்கை கேட்க பதிலுக்கு தெலுங்கானா அரசு மத்திய அரசுடன் மோதாமல் டீன்மர் மல்லண்ணாவை விடுதலை செய்யும் வழிகளில் இறங்கியது.
இதனால் 35 வழக்குகளில் கைது செய்யப்பட்டு 73 நாட்களாக சிறையில் இருந்த டீன்மர் மல்லண்ணாவை மாநில அரசு புதிய வழக்குகளை பதியாமல் மல்லண் ணா விடுதலையாக ஒதுங்கி நின்றது இந்த சூழலில் ஏறத்தாழ மாரிதாஸை குறைந்தது 50 நாட்கள் சிறையில் வைக்க ஆளும் திமுக அரசு முயற்சி செய்து வருவதாக பாஜக தலைமைக்கு தகவல் கிடைத்துள்ளது.
தொடர்ச்சியாக 20 முதல் 30 வழக்குகளை பதிவு செய்து மாரிதாஸை கைது செய்து சிறையில் அடைக்க ஆளும் அரசு முடிவு செய்துள்ள நிலையில் மாரிதாஸ் குடும்பத்தினர் உடன் மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க பாஜக மாநில தலைமை முடிவு செய்துள்ளதாக TNNEWS24-க்கு தகவல் கிடைத்துள்ளது. மாரிதாஸ் மீது வேறு ஏதேனும் வழக்குகள் பதிவு செய்தால் அதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வழக்கறிஞர் குழு முயன்றாலும் மாநில அரசு திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபாடுவதால் பாஜக மாநில தலைமை இந்த முடிவை எடுத்துள்ளதாம்.
No comments:
Post a Comment