Saturday, December 18, 2021

மாதங்களில் நான் மார்கழி என்று கண்ணன் கூறிய மார்கழி பீடை மாதமா?

 உங்களுக்குத் தலைவலிக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

பையனை அழைத்துச் சொல்கிறீர்கள்” மருந்துக்கடைக்குப் போய்த் தலைவலி மாத்திரை வாங்கி வா” என்று.
பையனும் கடைக்குச் சென்று தலைவலி மாத்திரை கேட்டுக் கடைக்காரர் மாத்திரை கொடுக்கிறார்,
அதைப் போட்டுக்கொண்டபின் உங்கள் வலி நீங்குகிறது.
தலைவலி மாத்திரை என்றால் என்ன?
தலைவலியை உண்டாக்கும் மாத்திரையா?
அல்ல.மாறாகத் தலைவலியை நீக்கும் மாத்திரை.
அதையே தலைவலி மாத்திரை என்கிறோம்.
அதே போல்,பீடை மாதம் என்றால்,பீடை ஏற்படுத்தும் மாதமல்ல;பீடையை நீக்கும் மாதம்!
நம் சம்பிரதாயப்படி, குறிப்பிட்ட ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. காரணம் இவை முழுக்க முழுக்க இறைவழிப்பட்டுக்கு என்றே ஒதுக்கப்படவேண்டிய மாதங்கள். அதிலும் மார்கழி மகத்துவம் நிறைந்தது...
இந்த மார்கழி மாதத்தில் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரைக்கும் மட்டும் தான் உயிர்வளியின் மூன்று அணுக்கள் கொண்ட ஓசோன் கணிசமான அளவில் இருக்கும். இந்த ஓசோனுக்கு வீரியம் அதிகம். இதைச் சுவாசிப்பதால் நம் உடலில் உள்ள இரத்தம் விரைவாகச் சுத்தம் அடைகிறது. நரம்பு மண்டலத்தைத் துடிப்பாக வைத்துக் கொள்வதன் மூலம் நினைவாற்றல் பெருகுகிறது, மார்கழி மாதக் காற்று தோலுக்கும், வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் உண்டு என்று சொல்லப்படுகிறது. இது விஞ்ஞான பூர்வமான அறிவியல் உண்மை.
இவ்வாறு நன்மை பயக்கும் ஓசோனைச் சுவாசிப்பதற்கு நாம் வெளியில் செல்ல வேண்டும். இவ்வளவு அதிகாலையில் வெறுமனே ஒரு மனிதனை வெளியே சென்று ஓசோன் நிறைந்த காற்றைச் சுவாசிக்கச் சொன்னால் எத்தனை பேர் கேட்ப்பார்கள்? அதற்குப் பதிலாக மார்கழி மாதம் அதிகாலை 6 மணிக்கு முன்னால் கோயிலுக்குப் போகும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால், மக்கள் அனைவரும் ஓசோனைச் சுவாசித்து உடல் நலம் சிறந்து, நினைவாற்றல் பெருகி நன்மை அடைவாரகள். ஆகவேதான் மார்கழி மாதம் அதிகாலையில் கோயிலுக்குப் போக வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாக இருக்கிறது....
நமது சொந்தக் காரியங்களை யெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த ஒரு மாதமாவது இறைவனின் மேல் நமது முழு சிந்தனையையும் செலுத்த வேண்டும் என்ற காரணத்தினால்தான் மார்கழியில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகளைத் தவிர்த்தார்கள் நம் முன்னோர்கள்.
பக்தி மார்க்கத்திற்கு வழிகாட்டும் மாதமாக மார்கழியைக் கருதினார்கள். வீடுபேறு எனும் மோட்சத்தினை அடைய உதவும் மாதம் இது.
பீடு என்றால் பெருமை மிகுந்த அல்லது உயரிய என்று பொருள். பீடு உடைய மாதமாகிய இதனை பீடை மாதம் என்று கூறுவது முற்றிலும் தவறு.
இத்துணை சிறப்பு வாய்ந்த இந்த மாதத்தில் நாமும் அதிகாலை நேரத்தில் மட்டுமாவது இறைவனின் மீது சிந்தனையைச் செலுத்துவோம்; வாழ்வினில் வளம் பெறுவோம்..!
May be an image of text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...