நேரு நள்ளிரவில் விமானத்தில் லண்டன் வருகிறார். தான் தங்க வேண்டிய ஹோட்டலுக்கு போவார் என்று பார்த்தால் நேராக லேடி மவுண்ட் பேட்டனைப்பார்க்க செல்லுகிறார்.
மவுண்ட் பேட்டன் அப்போது லண்டனில் இல்லை.
நேருவுக்காக நைட் கவுனோடு லேடி எட்வினா மவுண்ட்பேட்டன் கதவை திறந்து விடுகிற போட்டோ ’தி டெய்லி ஹெரால்ட்’ செய்தித்தாளில் வருகிறது. தலைப்பு “Lady Mountbatten’s Midnight Visitor.’’ லண்டனில் லார்ட் மவுண்ட் பேட்டன் அன்று இல்லை என்பதையும் டெய்லி ஹெரால்ட் சொல்கிறது.
கிருஷ்ணமேனன் அன்று பி.ஆர்.ஓ குஷ்வந்த் சிங்கைப் பார்த்து குரைக்கிறார். “ டெய்லி ஹெரால்ட் பாத்தியாய்யா? நேரு ஒன் மேல ரொம்ப கோபமா இருக்கிறார்”
குஷ்வந்த் சிங் பரிதாபமாக “எனக்கெப்படிங்க தெரியும். நேரு ஹோட்டலுக்குப் போகாம இப்படி அந்தம்மாவைப் பாக்கப்போவாருன்னு.”......
No comments:
Post a Comment