Friday, December 17, 2021

நிலைமையின் தீவிரத்தை தமிழக அரசு புரிந்து கொள்ளவேண்டும்!

 தமிழகத்தில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டேயிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில், நான்கு மடங்கு, ஐந்து மடங்கு என உயர்ந்து மக்களை விழி பிதுங்க வைக்கிறது. விவசாயிகளின் வயிற்றில் அடித்து இடைத்தரகர்கள் கொள்ளையடித்து கொண்டிருக்கிறார்கள். இதன் காரணம் என்ன? விலை உயர்வுக்கு மழை ,வெள்ள காலத்தில் விளைச்சல் குறைவு, போக்குவரத்து பிரச்சினை என பல்வேறு காரணங்களை சொன்ன தமிழக அரசு, தொடரும் விலை உயர்வுக்கு காரணம் என்ன என்பதை ஆராய்ந்து சரி செய்திருக்க வேண்டும்.

ஆனால் இடைத்தரகர்களின் கொள்ளையை, வாய் மூடி, மௌனம் காத்து வேடிக்கை பார்த்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு, நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து, உடனடியாக விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் அமைச்சர்களை ஈடுபடுத்த வேண்டும். உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுப்பது குறித்தும்,எந்த அமைச்சருக்கு கோளாறு உள்ளது என்று ஆராய்ச்சி செய்வதையும், அரசியல் தலைவர்களை ஒருமையில் தரம் தாழ்ந்து பேசுவதையும் நிறுத்தி விட்டு அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் காய்கறிகளின் செயற்கை விலையேற்றத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...