சிவனை* வணங்கும் போது திருநீறு இட்டுக் கொள்வது முக்கியம்
மற்றொன்று ருத்ராட்சம் அணிந்து கொள்வது, இதுவும் ரொம்ப சிறப்பு.
இது சிவபெருமானின் மூன்றாவது கண்ணாக சொல்லப்பட்டுள்ளது.
ருத்ராட்சம் அணிந்தவரை எம தூதர்கள் அண்ட மாட்டார்கள். அதாவது, கடைசி காலத்தில் கத்தி, கம்பு, தடி, ஈட்டியுடன் எம தூதர்கள் வர மாட்டார்கள்; திவ்ய தேகத்துடன் கூடிய பூத கணங்கள் வந்து அழைத்துப் செல்வர் என்பது நம்பிக்கை.
வாக்கினால் பஞ்சாட்சர ஜெபம் செய்து கொண்டு, வில்வத்தால் சிவார்ச்சனை செய்தால் நல்லது. சிவானுக்ரகம் பெறலாம் என்று உள்ளது. சிவானுக்ரகம் ஏற்பட்டால், எல்லா ஐஸ் வர்யங்களும் பெற்று, மோட்ச சாம்ராஜ்யமும் கிடைக்கும்!
விபூதிர் பூதிரைச்வர்யம்’ என்பதால் விபூதி இட்டுக் கொண்டால் ஐஸ்வர்யம் கிடைக்கும். ஒரு வில்வ தலத்தைப் போட்டால், மோட்ச சாம்ராஜ்யமே கிடைக்கிறது.
பரமேஸ்வரனுக்கு விலை உயர்ந்த புஷ்பங்களைக் கொண்டு வந்து பூஜிக்க வேண்டும் என்று இல்லை; சாதாரண மான தும்பைப் பூ, எருக்கம் பூ, இவைகளை அர்ப்பணம் செய்தாலே அவன் மகிழ்ந்து போகி றான்.
இப்படியெல்லாம் பிரதி தினம் செய்ய முடியாதே என்றும் தோன்றலாம். பரவாயில்லை, சிவராத்திரி, பிரதோஷம் போன்ற காலங்களில் செய்தாலும் போதும். தினசரி சிவநாமம்சொன்னாலும் போதும்.
ஏதாவது ஒரு விதத்தில் அவனது தொடர்பு இருந்தாலே போதுமே! விபூதி மகிமை, ருத்ராட்ச மகிமை, துளசி மகிமை என்ப தெல்லாம் மிக முக்கியமானது.
அகிலம் காக்கும் அண்ணாமலையார் பொற்பாதத்தில் ஈசனிடம் யாசகியின் நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரங்கள் இனிய ஈசனே
உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள்
ஆலவாயர் அருட் பணி மன்ற எம் குருவான தந்தைக்கு ஆத்ம நமஸ்காரங்கள்.
எம் குருவான தந்தையே.
No comments:
Post a Comment