நிறைய பேர் விதவிதமாக சூப்பரா பிளான் போடுவாங்க. ஆனால் ஒரு பிளான் கூட ஒர்க் அவுட் ஆகாது. அதிகாலை வேளையில் எழுந்து, இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அதை அவர்களால் செய்ய முடியாது. நாளை காலை 6 மணிக்கு எழுந்து முதலில் இவரைப் போய் சந்திக்க வேண்டும். இந்த வேலையை முதலில் முடித்தால் பெரிய தலைவலி குறையும் என்று நினைப்போம். ஆனால் அடுத்தநாள் காலை 10 மணிக்குத்தான் எழுந்து இருப்போம்.இன்றைக்கு அலுவலகத்தில் சுறுசுறுப்பாக வேலை செய்து மேலதிகாரியை அசத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் ஒரு வேலையைக் கூட அலுவலகத்தில் உருப்படியாக செய்ய முடியாதபடி கொட்டாவி மேல் கொட்டாவி வரும். தூக்கத்திற்கு மேல் தூக்கம் வரும்.
இப்படியாக நம்முடைய மனதில் நினைப்பது ஒன்று. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் நடப்பது வேறு. இதற்கெல்லாம் என்ன காரணம். நம்மை சுற்றி இருக்கக் கூடிய ஆரா வட்டம் சரியாக இயங்கவில்லை. வெள்ளையாக இருக்க வேண்டிய ஒளிவட்டம் கருப்பாக கருகிப் போய், மங்கிப்போய் இருக்கின்றது. இதை எப்படி சரி செய்யலாம். ஒரு சின்ன குறிப்பு உங்களுக்காக.சுத்தமான பன்னீரை வாங்கி ஒரு பாட்டிலில் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். துளசி இலை பரிகாரத்த்திற்க்கு மிகவும் நல்லது. தினமும் துளசி இலை கிடைக்காது என்றால் காய்ந்த துளசி பொடி நாட்டு மருந்து கடைகளில் விற்கும் அதை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். கொஞ்சமாக பச்சை கற்பூரம். பன்னீர், துளசி இலை பொடி, இந்த 3 பொருட்கள் போதும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக துளசி இலை பொடி, கொஞ்சமாக பன்னீர், அதில் கொஞ்சமாக பச்சை கற்பூரத்தை நுணுக்கி போட்டு நன்றாக கலந்தால் திலகம் தயார். இந்த கலவை கெட்டுப்போகாது. ஏழிலிருந்து பத்து நாட்கள் அப்படியே நன்றாகத்தான் இருக்கும். தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு குலதெய்வத்தையும் துளசி மாதாவையும் நினைத்து இந்த திலகத்தை நெற்றியில் இட்டுக்கொண்டு சென்றால் நீங்கள் முந்தைய நாள் என்ன பிளான் செஞ்சீங்களா அது உங்களுக்கு நிச்சயம் சக்சஸ் தான்.இது பச்சை நிறத்தில் இருக்கும். நெற்றியில் வைத்தால் எல்லோர் கண்ணுக்கும் தெரியும் என்றால் இந்த பொட்டை நெற்றியில் வைத்து விட்டு அதன் மேலே விபூதி அல்லது குங்குமத்தை கூட வைத்துக்கொள்ளலாம். சரிங்க நெற்றியில் வைக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. இதை இலேசாக எடுத்து உங்களுடைய உச்சந்தலையில் கொஞ்சம் தடவிக் கொண்டு செல்லுங்கள்.துளசி இலைகளாக கிடைத்தால் அந்த துளசி இலைகளை ஒரு அம்மியில் வைத்து மைய விழுது போல அரைத்து பன்னீர் ஊற்றி, கொஞ்சமாக பச்சை கற்பூரம் சேர்த்து விழுதாக தயார்செய்து ஒரு டப்பாவில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். இந்த திலகத்தையும் மேல் சொன்ன முறைப்படி நெற்றியில் அல்லது உச்சந்தலையில் இட்டுங கொள்ளுங்கள். நிச்சயமாக உங்கள் பக்கம் வெற்றி நிற்கும்.
No comments:
Post a Comment