Sunday, April 17, 2022

தெரிந்தும் தெரியாமலும் உங்கள் வீட்டு ஹாலில் இவ்வாறான பொருட்களை வைத்திருந்தால் லட்சுமி கடாட்சம் குறைந்து தரித்திரம் தான் சேரும்.

 ஒவ்வொரு மனிதனும் கடினமாக உழைத்து, நேர்மையாக வாழ்ந்து சந்தோஷமாக தனது குடும்பத்தை வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தாலும், ஐஸ்வர்யமும், அதிர்ஷ்டமும் நிறைந்து இருந்தால் மட்டுமே இது போன்ற அனைத்து கனவுகளும் நிறைவேறும். மனிதனின் சக்தியை விட அதிசக்திவாய்ந்த ஒன்று இருக்கிறது, என்பது மனிதர்களாகிய அனைவரின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். எனவே தெய்வத்தின் அருள் முழுவதுமாக கிடைக்கப் பெற்றால் மட்டுமே ஒவ்வொருவரின் வாழ்க்கையும் சந்தோஷமாக இருக்கும். மனிதனின் வாழ்க்கை சந்தோஷமாக அமைய இப்பொழுது தேவைப்படுவது என்னவென்றால் உடல் ஆரோக்கியம் மற்றும் பணம். இவை இரண்டும் இருந்தால் மட்டுமே மனநிம்மதி, குடும்பத்தில் மகிழ்ச்சி போன்றவை நிறைந்திருக்கும். இவ்வாறு இறைவனின் அருளும், ஐஸ்வர்யமும் கிடைக்க நமது அன்றாட வாழ்வில் நாம் செய்யும் தவறுகளை மாற்றிக் கொண்டு தான் ஆக வேண்டும். அவ்வாறு நமது வீட்டில் அதிர்ஷ்டத்தை தடுக்கக்கூடிய செயல்கள் என்ன என்பதைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஆண்கள் எப்போதும் அதிக மன உறுதி கொண்டவர்கள் எவ்விதமான துன்பமாக இருந்தாலும் அதனை அவர்கள் மனதிற்குள்ளே வைத்துக் கொள்வார்கள். ஆனால் பெண்கள் அப்படிப்பட்டவர்கள் கிடையாது. எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதனை யாரிடமாவது சொல்லி விட்டால் மட்டுமே அவர்களின் மனதிற்கு நிம்மதி கிடைக்கும். அவ்வாறு பல பெண்மணிகள் தங்கள் வீட்டின் சூழ்நிலையில் பற்றி மற்றவரிடம் புலம்பி கொண்டு இருப்பார்கள். எனக்கும் எனது கணவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது, சரியான வருமானம் கிடைப்பதில்லை, குழந்தைகளும் சரியாக படிப்பதில்லை, வீட்டில் யாருக்காவது ஒருவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுகிறது, வருகின்ற வருமானம் கையில் தங்குவதில்லை என பல காரணங்கள் சொல்லி புலம்புவார்கள். இவ்வாறான பிரச்சினைக்கு முதல் காரணம் நமது வீட்டில் நாம் செய்யும் சில தவறுகள் தான். அதிலும் எப்போதும் வீட்டில் இருக்கும் பெண்களின் கையில்தான் இவற்றை சரி செய்ய வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அவ்வாறு ஒவ்வொரு வீட்டின் மையப் பகுதியான ஹாலில் சில தேவையற்ற பொருட்கள் இருப்பதை அகற்ற வேண்டும்.

அப்படி அனைவரும் செய்யும் முதல் தவறு என்னவென்றால் அழுக்கு துணிகளை ஹாலில் போட்டு வைப்பது, அல்லது அழுக்குத் துணி போடும் கூடையை ஹாலில் வைத்திருப்பது. இவ்வாறான செயலை நிச்சயம் செய்திடக் கூடாது. அடுத்ததாக துணி துவைக்கப் பயன் படும் வாஷிங் மெஷினையும் ஹாலில் வைக்கக் கூடாது. ஹாலில் தொங்கவிடப் பட்டிருக்கும் கதவு, ஸ்கிரீன் மற்றும் ஜன்னல் ஸ்க்ரீன் இவை அனைத்தும் சுத்தமானதாக எவ்வித கிழிசல்களும் இல்லாமல் இருக்க வேண்டும். அதுபோல வீட்டு ஹாலில் போடப்பட்டிருக்கும் கால்மிதி கிழிந்திருக்காமல் சுத்தமாக இருக்க வேண்டும். ஆங்காங்கே ஒட்டடைகள் தொங்கிக் கொண்டிருந்தால் அதனை உடனே சுத்தம் செய்யவேண்டும். தரைப்பகுதியும் சுத்தமாக இருக்க வேண்டும். மிகவும் முக்கியமாக மின் விளக்குகள், மின்விசிறிகள் அனைத்தும் எவ்வித அழுக்கும் இல்லாமல் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...