நமக்கு என்று விழிப்புணர்வுடன் கூடிய அறிவை அறிவித்து இருக்கிறான் இறைவன் !!
அதில் நீங்கள் கொஞ்சம் ஆழ்ந்து இருந்து பார்த்தால் உங்களுக்கு என்று சில விஷயங்கள் தனிதுவதுடனே புலப்படும் !!
சொல்லியவர் ஞானியாகவே இருந்தாலும் !!
அதை எடுத்து சொல்பவர்கள் தங்களுக்கான கருத்து திணிப்பு என்பது சர்வ நிச்சியமாக இருக்க தான் செய்யும் !!
சொன்னதை கேளுங்கள் !! உள்வாங்குங்கள் !!
உங்களுள் அது உங்களுக்கு என்று சொல்வது என்று ஒன்று இருக்கும் அதை ஏற்றுகொள்ளுங்கள் !!
ஆட்டு மந்தைகள் அல்ல நாம் தனித்துவமானவர்கள் தான் !!
இந்த மெய்யை உணராது அப்படி ஏதாவது சொன்னால் நம்மை தப்பாக நினைப்பார்கள் என்று நீங்களாக நினைத்துகொண்டு !!
அப்படியே ஏற்றுகொள்வது போல நடித்து என்ன செய்ய !!
ஒவ்வொருவரும் அவர்களுக்கான கோணத்தில் அனுபவித்ததை சொல்லி இருக்கிறார்கள் !!
இப்படியும் அனுபவிக்கலாம் என்று !!
அப்படியே தான் பயணிக்கவேண்டும் என்று யாரும் வற்புறுத்தவே இல்லை !! என்றால் அவர்கள் தனித்துவத்துடன் பயணித்ததின் வெளிப்பாடே நீங்கள் இப்போது படிப்பது எல்லாமே !!
நீங்கள் அதிலேயே அப்படியே பயணிக்க வரவில்லை !!
அதை கடந்தோ !!
அதை அடிப்படையாக கொண்டோ !!
அதற்க்கு அடுத்த நிலைக்கு பயணிக்க வந்திருக்கிறோம் !!
இப்படி ?? அப்படி ? என்று மட்டும் உங்களை முடக்கி கொள்ளவேண்டாம் !!
எப்படியுமானவன் கருணையால் எப்படியும் தான் நீங்களும் .
No comments:
Post a Comment