Thursday, May 5, 2022

நன்றி என்பது என்ன?

 1.அன்புதான்...

2.பாராட்டுதான்..
3.இருப்பதை நினைத்து சந்தோஷப்படுவதுதான்.
நன்றிஏன்சொல்ல வேண்டும்?
1. பெற்றுள்ளதை உணர்வதற்காக.
2. இன்னும் தேவையானதை, பெறுவதற்காக.
3. இருக்கும் நல்லதை தக்க வைப்பதற்காக.
*நன்றியை எப்படி எல்லாம் வெளிப்படுத்தலாம்?
1. மனப்பூர்வமாக/உணர்வுபூர்வமாக வெளிப்படுத்த வேண்டும்.
2. நல்ல வார்த்தைகளாலும், நல்ல செயல்களாலும் வெளிப்படுத்தலாம்.
3. நன்றி உணர்வையும் உங்களையும் பிரிக்க முடியாதபடி, நீங்கள் பெறப்போகும் ஒன்றிற்கு, பெற்றுவிட்ட உணர்வோடு... வெளிப்படுத்தலாம்.நன்றியை எதற்கு எதற்கெல்லாம் சொல்லலாம்?
1. பிறந்ததிலிருந்து இதுநாள்வரை வளமோடு வைத்திருக்க உதவும் இயற்கைக்கும், மனிதர்களுக்கும்.
2. நம் உயிரை வைத்திருக்கும் ஆரோக்கியமான உடலுக்கும், உடலிலுள்ள உறுப்புகளுக்கும்.
3. இதுநாள் வரை பெற்ற ஆசீர்வாதங்களுக்கும், இனி... பிரபஞ்சப் பேராற்றல் தரப்போகும் நன்மைகளுக்குமநன்றியுணர்வோடு இருப்பதால் என்ன பலன்கள் கிடைக்கும்?
1. முதலில் அமைதியும், திருப்தியும் கிடைக்கும்.
2. நீங்கள் தேவையானதாக நினைப்பதைவிட, உங்களுக்குத் தேவையானது எதுவோ அதுவெல்லாம் கிடைக்கும்.
3. வாழ்வின் வளங்கள் அனைத்தும் பெற்றதான மனம் உணர்கின்ற வாய்ப்பு கிடைக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...