Tuesday, May 3, 2022

பெயரை மாற்றிக் கொள்வாரா முதல்வர்?

 மதுரை அரசு மருத்துவ கல்லுாரியில் நடந்த, முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில், தேசிய மருத்துவ கமிஷன் பரிந்துரைத்த, 'மகரிஷி சரக் சபத்' என்ற, சமஸ்கிருத வாக்கியத்தை கூறி, ஆங்கிலத்தில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்ததால், கல்லுாரி, 'டீன்' ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.



latest tamil news




தமிழக அரசின் இந்த நடவடிக்கையை அராஜகம், சர்வாதிகாரம், அக்கிரமம் போன்ற வார்த்தைகளால் வர்ணிப்பதை தவிர, வேறு வழியில்லை. முதல் விஷயம், 'மகரிஷி சரக் சபத்' என்ற வார்த்தை, மாணவர்கள் தாங்களாக உருவாக்கியவை அல்ல; தேசிய மருத்துவ கமிஷன் பரிந்துரைத்தது.

இரண்டாவது, சமஸ்கிருதம் ஒன்றும் தீண்டத்தகாத மொழி அல்ல. ஜெர்மன் நாட்டு விஞ்ஞானிகள் பலர், சமஸ்கிருத மொழியின் உதவியோடு தான், தங்களின் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளனர்.



தமிழகத்தில், இன்றைக்கு முதல்வராக கோலோச்சி கொண்டிருப்பவரின் திருநாமம், அதுதாங்க பெயர் -என்ன? ஸ்டாலின். முதல்வரின் பெயரில் உள்ள, 'ஸ்' என்ற எழுத்து, சாட்சாத் சமஸ்கிருதம் தானே! சமஸ்கிருத எழுத்தில் துவங்கும் பெயரை தன்னகத்தே கொண்டுள்ள முதல்வரை, ஸ்டாலின்... ஸ்டாலின்... என்று, ஒவ்வொரு நாளும் எத்தனை முறை தி.மு.க.,வினரும், அவர்களின் கூட்டணி கட்சியினரும், குடும்பத்தினரும் அழைக்கின்றனர்.


latest tamil news



'ஸ்' என்ற சமஸ்கிருத வார்த்தையை எத்தனை முறை அவர்கள் உச்சரிக்கின்றனர்! அவர்கள் அனைவரையும் யார் தண்டிப்பது... கண்டிப்பது... எப்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றுவது? முதல்வர் ஸ்டாலின், தன் பெயரை துாய தமிழில், 'ச்டாலின்' என்று மாற்றிக் கொள்வாரேயானால், அவருக்கு தமிழ் மீதுள்ள பற்றையும், பாசத்தையும், சமஸ்கிருதத்தின் மீதுள்ள துவேஷத்தையும் உணர முடியும்.

பெயரை மாற்றிக் கொள்வாரா முதல்வர்? சம்மதமா? தமிழக அரசின் சமீபத்திய செயல்பாட்டை எல்லாம் பார்த்தால், 'விநாசகாலே விபரீத புத்தி' என்ற, சமஸ்கிருத பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...