Thursday, May 5, 2022

அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவம்.

 ஒரு பெரிய வர்த்தகர். இவர் தன்னுடைய விலை உயர்ந்த காரில் சென்று கொண்டிருந்த போது ஏதோ கோளாறு ஏற்பட்டுவிட்டது. பெரிய பெரிய பொறியியலாளர்களைக் கொண்டு சரி செய்ய முயற்சிக்கிறார். ஆனால் முடியவில்லை.

இறுதியாக மிகவும் அனுபவம் வாய்ந்த ஒரு பொறியியலாளரை அழைத்து வருகிறார்கள். அவர் வந்து ஒரு கொஞ்ச நேரத்தில் சுத்தியலை எடுத்து எஞ்சினில் ஒரு இடத்தில் தட்டுகிறார். சரியாகிவிட்டது. எஞ்சின் மறுபடியும் இயங்குகிறது.
இதற்கு கூலியாக 10000 டொலர் கேட்கிறார் அந்த பொறியியலாளர். அதிர்ந்து போன உரிமையாளர் இது மிகவும் அதிகம். ஒரு அரை மணி நேர வேலைக்கு 10000 டொலரா என்கிறார். தனக்கு எந்த வேலைக்கு எவ்வளவு கூலி என விபரம் வேண்டும் என்கிறார்.
அதற்கு அந்த பொறியியலாளர் சிரித்துக்கொண்டே சுத்தியலால் தட்டியதற்கு 100 டொலர் . எந்த இடத்தில் தட்ட வேண்டும் என்பதற்கு 9900 டொலர் என்கிறார்.
ஆம் இலக்குகளை நோக்கி நாம் பயணித்தால் மட்டும் போதாது. எதைச் செய்தால் அதை விரைவாக அடையலாம் என்பதை அறிந்து நமது நகர்வுகள் இருக்க வேண்டும்.
Hard work மட்டுமல்ல கொஞ்சம் smart workம் செய்ய வேண்டும்.
May be an image of 1 person and car

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...