Thursday, May 5, 2022

பாரதியின் பெயரை சூட்டலாமே!

 கிழக்கு கடற்கரை சாலைக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை சூட்டியிருக்கிறார், அவரின் மகனான தற்போதைய முதல்வர் ஸ்டாலின். இதன் வாயிலாக, அந்த சாலை தன் அடையாளத்தை இழக்கிறது. சுதந்திர போராட்ட காலத்தில், பாரதியார் அடிக்கடி சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு பயணம் செய்ததையும், அங்கே சில காலம் தங்கியிருந்ததையும் நாம் அனைவரும் அறிவோம். அவர் சுதந்திர போராட்ட வீரர் மட்டுமல்ல; பத்திரிகையாளர், கவிஞர் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்டவர். தமிழகத்தில் மட்டுமின்றி, வட மாநிலங்கள் வரை, பல லட்சக்கணக்கான இந்தியர்களை ஊக்கப்படுத்திய, பன்முகம் கொண்டிருந்த மிகச்சிறந்த தேசபக்தர். அப்படிப்பட்ட தேசிய கவியான பாரதியின் பெயரை, கிழக்கு கடற்கரை சாலைக்கு சூட்ட, தமிழக அரசு பரிசீலித்திருக்க வேண்டும். ஆனால், இன்றைய ஆட்சியாளர்களோ, தேச தலைவர்களின் பெயர்களை விடுத்து, வாரிசு அரசியலை முன்னிறுத்துவது மட்டுமின்றி, தங்களது குடும்ப நபர்களின் பெயரை சூட்டி சுயவிளம்பரம் தேடிக் கொள்வதில் தான் முனைப்பு காட்டுகின்றனர். கிழக்கு கடற்கரை சாலைக்கு, மகாகவி சுப்ரமணிய பாரதியார் சாலை என பெயர் சூட்டுவதே பொருத்தமானதாக இருக்கும். அதன் வாயிலாக, நம் பாரத தேசத்திற்கான அவரது பங்களிப்புகளை, எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளவும், அவரது பாரம்பரியத்தை கொண்டாடவும் இது வழிவகுக்கும். சுயமரியாதை உள்ள மக்களாகிய நாம், இந்த விஷயத்தில் அரசின் செயலை கண்டிப்பதுடன், பெயர் அரசியலில் ஆளுமைகள் மறைக்கப்படுவதை தடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...