நிறைய நண்பர்கள்,"ரம்ஜானுக்கு பிரியாணி வேண்டும் பாய்"என அன்பாக கேட்கிறார்கள்!
இதில் பெரும்பாலும் நட்பின் அடிப்படையில் நகைச்சுவைக்காக கேட்கிறார்கள்!
"அடிச்சாலும்,புடிச்சாலும் அண்ணன் தம்பி நானடா"என்ற மத நல்லிணக்கமும் இதில் ஒளிந்து இருப்பதில் ஆச்சர்யமில்லை!
ஆனால் உண்மையிலே நீங்கள் பிரியாணி கேட்டாலும் அவர்களுக்கு கொடுக்க முடியாத சூழ்நிலைதான்!
தமிழகத்தை பொருத்தவரை தொன்னூறு சதவீத இஸ்லாமியர்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள்!
மதம் வேறாக இருந்தாலும் வாழ்வியல் முறை ஒன்றுதான்!வீடு கட்டனும்,தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும்,குடும்ப கடனை அடைக்கனும் என ஒவ்வொருவரின் வாழ்வும் தடுமாற்றத்துடனும்,போராட்டத்துடன் கழிகிறது.
குடும்ப கஷ்டத்திற்காக திருமணம் ஆகி மறு நாளே வெளிநாடு செல்லும் நிறைய அன்பர்களும் உண்டு.
சாமி கும்பிடுவதில் வேறு படுத்திக்கொள்கிறார்களே தவிர இவர்கள் குடும்பங்களுக்கும் அங்காளி,பங்காளி சண்டை,சொத்து பிரச்சனை,போட்டி,பொறாமை இப்படி ஒருவர் வாழ்வுக்கு உண்டான அனைத்தும் உண்டு.
நாம தீபாவளி பண்டிகைக்கு பொருளாதார ரீதியாக தடுமாறுவது போல அவர்களும் பெரு நாளுக்கு துணி எடுக்கனும் மற்ற அனைத்து செலவுக்களுக்கும் தாவு தீர்ந்து விடும்.
பெருநாளுக்கு பிரியாணி செய்தாலும் அக்கம் பக்கத்தினரோடு பறிமாறுதல்,உறவினர்களை விருந்துக்கு அழைத்தல் சம்பிதாயங்களால் ஒவ்வொருத்தருக்கும் ஒரு செலவு பிடிக்கும்.
ஆட்டுக்கறியே ஒரு கிலோ 700 ரூபாய்!
என்னை பொருத்தவரை அவர்களுடைய பெருநாளுக்கு
வாழ்த்துகள்
கூறி அன்பை வெளிப்படுத்தினால் போதும்.மற்றபடி சும்மாவாச்சும் பிரியாணி கேட்கிறேன் என அவர்களை தர்மசங்கடப்படுத்தாமல் இருப்பது நல்லது!!
ரம்ஜான்
வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment