Sunday, May 15, 2022

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு:தென்காசி மாவட்ட பஞ்சாயத்தில் மோதல்;.

 தென்காசியில் நடந்த மாவட்டபஞ்சாயத்து கூட்டத்தில் தி.மு.க.,கவுன்சிலர்கள் ஒருமையில் பேசிமோதலில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் தமிழ்ச்செல்வி.இவரது கணவர் சுபாஷ் சந்திரபோஸ் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய தி.மு.க.,கவுன்சிலராக உள்ளார். சுபாஷ்சந்திர போஸ், முதல்வர் ஸ்டாலின்பிறந்தநாள் விழா நடத்தியது குறித்துகட்சி பிரமுகரிடம் பேசிய ஆடியோவெளியானது.
அதில் ஸ்டாலின்,முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் குடும்பத்தினரையும் அவதூறான சொற்களால் பேசியுள்ளார். நேற்று நடந்த தென்காசி மாவட்டம் பஞ்சாயத்துகூட்டத்தில் இந்த பிரச்சனையை தி.மு.க., கவுன்சிலர் கனிமொழி எழுப்பினார். முதல்வர் குறித்து அவதூறாக பேசிய சுபாசும் அவரது மனைவியும் தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டு பெற்ற பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். அவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து பேசியதி.மு.க., கவுன்சிலர் சாக்ரடிஸ்க்கும்இடையே பலத்த வாக்குவாதம்எற்பட்டு ஒருமையில் பேசினர். இதில்நீக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர். இதுகுறித்து பேசிய தி.மு.க., கவுன்சிலர் சாக்ரடிஸ்க்கும்இடையே பலத்த வாக்குவாதம்ஏற்பட்டு ஒருமையில் பேசினர். இதில்தி மு.க.,வினர் இடையே மோதல்ஏற்பட்டது. தென்காசி போலீசார்மாவட்ட பஞ்சாயத்து அரங்கிற்குவந்து அமைதிப்படுத்தினர்.

கடந்தமுறை நடந்த முதல் கூட்டத்திலேயேஉறுப்பினர்களின் அனுமதி இல்லாதிட்டங்களை செயல்படுத்தி ஊழல்ஏற்படுத்தியதாக மாவட்ட பஞ்சாயத்தலைவி தமிழ்செல்வி மீது புகார் கூறப்பட்டது. தற்போது அவரதுகணவரின் அலைபேசி உரையாடல் ஆபாசமாக பேசிய ஆபாச உரையாடல் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...