உயிரோடு இருக்கானா இல்லையா"னு தெரியாத சுஜித்துக்கு விடிய விடிய லைவ் டெலிகாஸ்ட் போட்டீங்களே...
உயிரோடு கையை உயர்த்தி காப்பாற்றுங்கள் என்று 15 மணி நேரமாக போராடிய செல்வத்தைப் பற்றி ஏன் ஊடகங்கள் லைவ் டெலிகாஸ்ட் செய்யவில்லை ?
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல....
15 மணி நேரத்திற்கும் மேலாக "யாராவது என்னை காப்பாற்றுங்கள்" என்று கையை உயர்த்தி வேண்டுகோள் வைத்த செல்வம் தற்போது உயிரிழந்துள்ளார்.
போர்க்கால அடிப்படையில் இத்தனை நடவடிக்கைகளை அதிமுக அரசு எடுத்த போதும்... அரசு எதுவுமே செய்யவில்லை என, சுஜித் மரணத்தில் 24 மணிநேரமும் ஒப்பாரி வைத்த ஊடகம் வெட்கமின்றி தற்போது மட்டும் அமைதி காப்பது ஏன் ?
பிண அரசியல் நடத்திய திருட்டு கட்சி எங்கே ?
அரக்கோணத்தில் இருந்து மீட்பு படை வருகிறது வருகிறது என்று சொல்லி 15 மணி நேரம் ஆகியும் வராமல் இருக்கிறதே அதற்கு காரணம் என்ன?
லாக்கப் மரணம் பற்றி விவாதிப்பதில்லை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு பற்றியும் விவாதிப்பதில்லை, இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சுஜித்துக்கு காட்டிய அக்கறை, கல்குவாரி இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த செல்வதற்கு கிடைக்கவில்லை.
ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கும் விதமாகத் தான் ஊடக தர்மம் இருந்திருக்க வேண்டும்.
ஆனால் இன்று ஒரு குடும்பத்திற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு ஜனநாயகத்தையும் குழிவெட்டி புதைப்பது எந்த வகையில் நியாயம் ?
அதிமுக ஆட்சியில் எங்கே ஒரு சிறு தவறு நடந்தாலும் பூதாகரமாக்கி அரசியல் செய்த ஊடகம்,
தற்போது மயான அமைதி காப்பது ஏன்?
இதற்கெல்லாம் வேட்டு வைக்கும் விதமாக ஒரு நாள் ஜனநாயகம் தமிழகத்தில் மலர்ந்தே தீரும், அந்த நாள் அதிமுக ஆட்சி இந்த மண்ணில் அமைந்திருக்கும்.
No comments:
Post a Comment