நம் நாட்டை பொறுத்த வரை விருந்தோம்பல் தானே முக்கியம்..
யாருக்கு என்ன பிடிக்கும் எந்த மாதிரி ருசி சின்னவனுக்கு காரம் ஆகாது பெரியவளுக்கு புளிப்பு சேராது அவருக்கு உப்பும், இனிப்பும் கூடாது இது நமக்கு தெரியற மாதிரி அவங்களுக்கு தெரியுமா?
தந்தையை விட தாயை அதிகமா பிடிக்க காரணம் அவதான் நம்ம பசியை தீர்க்கறவ அதனாலதானே..
சங்க காலங்களில் கூட,
" முளி தயிர் பிசைந்த
காந்தள் மெல் விரல்
கழுவுறு கலிங்கம்
கழா அது உடி இக்
குவளையுண் கண்
குய்ப்புகை கமழத் தான் துழந்து அட்டத் தீம்புளிப் பாகர் கணவன் உண்டலின் நுண்ணுதல்
முகிழ்ந்தன்று நன்னுதல் முகனே"
இதானப்பா நம்ம வாழ்க்கநினைக்கிறேன்
..அவசர அவசரமா கணவனுக்கு மோர்க் குழம்பு வைக்கும்போது அந்த கைய புடவை தலைப்பில் துடைக்கறாங்க அந்த மோர்க் குழம்பை கணவன் ருசியா இருக்குன்னு சொல்றப்ப தலைவி முகம் மலருது..
இங்க வயிறு மட்டும் நிறையல.இரண்டு இதயங்கள் நிறையுது
வயிறு உணவாலயும்
உள்ளம் அன்பாலயும்
நிறையுது இல்லயா..
என் கணவருக்கு வேற யார் சமைச்சாலும் பிடிக்காது.எங்காவது போனா கூட
" போய் கொஞ்சம் என்னன்னு பாரேன் ப்ளீஸ்.." யார் வீட்டுக்கு போனாலும் நான் கிச்சனுக்குள்ள போய்டுவேன் நான் தான் பரிமாறுவேன்..
வயதானவர்களுக்கு வரம் என்று சொன்னாலும் அவர்களை பாதுகாக்க வேண்டியவர்கள் எங்க போனாங்க?.
இன்னும் கொஞ்ச நாள் போனா அடுப்பங்கரைங்கறது அகழ்வாராய்ச்சியோட சேர்ந்துடும்ன்னு நினைக்கிறேன்.
No comments:
Post a Comment