Wednesday, February 22, 2023

நாம் படிக்கும் வரலாறே தவறு என அழகாக கூறியது போன்றுள்ளது.

 படையெடுத்து வந்தவர்களையும், கோயில்களை இடித்தவர்களையும்,

பற்றி வரலாற்றில் பக்கம் பக்கமாக படித்த நாம் அகல்யா பாய் என்னும் ஒரு விதவை பெண் 30 ஆண்டுக்காலம் மத்திய பிரதேஷ் இந்தூர் பக்கம் மஹேஷ்வரை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்ததையும், 100 க்கும் அதிகமான கோயில்களை புணரமைப்பு செய்ததையும் பற்றி ஒரு வரியில் படித்து கடந்திருப்போம்!!!
Ahalya Bai Holkar - Malwa Kingdom
Born : 31 May 1725, Jamkhed
Died : 13 August 1795, Indore
கணவரும், மாமனாரும், மகனும் இறந்த பின் ராணி ஆனவர். 29 வயதில் கணவனை இழந்தவர். சதி ஏற இருந்தவரை இவரின் மாமனார் Malhar Roa தடுத்து விட்டார்.
1767 ல் ராணி ஆனார். துக்கோஜி ராவ் ஹோல்கர் என்ற தளபதியின் துணையுடன் பகைவர்களை எதிர் கொண்டவர்.
அவரது ராஜ்ஜியத்திற்கு வெளியேயும் கூட, வடக்கே இமயமலையிலிருந்து தெற்கே உள்ள புனித யாத்திரை மையங்கள் வரை பரவியுள்ள டஜன் கணக்கான கோயில்கள், மலைத்தொடர்கள், கிணறுகள், குளங்கள் மற்றும் ஓய்வு இல்லங்களை நிர்மாணித்தவர்.
ஹோல்கர் ராணி காசி, கயா, சோம்நாத், அயோத்தி, மதுரா, ஹரித்வார், காஞ்சி, அவந்தி, துவாரகா, பத்ரிநாராயண், ராமேஷ்வர் மற்றும் ஜகநாதபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களை, கோயில்களை அழகுபடுத்தினார்.
மகேஷ்வரில் உள்ள அவரது தலைநகரம் இலக்கியம், இசை, கலை மற்றும் தொழில்துறை சாதனைகளின் கலவையாக இருந்தது.
மராத்தி கவிஞர் மோரோபந்த், ஷாஹிர் அனந்தபாண்டி மற்றும் சமஸ்கிருத அறிஞர் குஷாலி ராம் போன்ற தலைசிறந்தவர்களுக்காக அவர் தனது தலைநகரின் கதவுகளைத் திறந்தார்.
அவரது தலைநகரம் தனித்துவமான கைவினைஞர்கள், சிற்பிகள் மற்றும் கலைஞர்களுக்காக அறியப்பட்டது, அவர்கள் தங்கள் பணிக்காக அழகாக ஊதியம் பெற்றனர் மற்றும் ராணியால் உயர்ந்த மரியாதையுடன் இருந்தனர். அவர் நகரத்தில் ஒரு ஜவுளித் தொழிலை நிறுவவும் செய்தார். இன்றளவும் அத்தொழில் அங்கே உள்ளது.
நர்மதை நதியின் ஓரத்தில் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான அகல்யா கோட்டையை நான் 2016 அக்டோபரில் ரசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது.
டைரக்டர் மணிரத்னம் அலைபாயுதே படத்திலும், பொன்னியின் செல்வன் படத்திலும் இந்த அழகிய கோட்டையை பாடல் காட்சியில் இன்னும் அழகாக காட்டி இருப்பார்.
ஆட்சியாளர்கள் கோயில்களை கட்டுவதும், புதுப்பித்தலும் செய்வது இந்தியாவில் தொன்று தொட்டு செய்து வரும் ஒரு செயலே!!
இதை செய்வது பெரும்பான்மையினர் ஓட்டுக்காக மட்டுமல்ல!!!
ஒரு நாட்டின் கலாச்சார அடையாளம் என்பதை அழிய விடகூடாது என்ற எண்ணமும் தான்!!
All reactio

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...